எனது ஞானத்தை புதைத்து விட்டாயே!

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 56

நான் உனக்காக இருக்கிறேன்; நீ எனது ஞானத்தை புதைத்து விட்டாயே! 

==============================

ஹஸன் பின் உஸ்மான் அல் கின்திரீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; (அல்லாஹ்வை வணங்குவதற்கு இடையூறாக இருப்பதால்) ஒரு நாள்  எனது இஸ்லாமிய நூல்களை நான் புதைத்து விட்டேன்;  பின்னர் இபாதத் -  இறைவழிபாடு செய்யவும், மார்க்க விஷயங்களை ஆய்வு செய்யவும், அதில் தெளிவு பெறவும் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். 

இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், ஒரு உயரமான இடத்தில் ஏறிக் கொண்டிருந்தார்கள்; தனது கைகளால் ஒர் இடத்தை சுட்டிக் காட்டினார்கள்; அந்த இடத்தை நான் பார்த்தேன்; அங்கே சில பேனாக்கள் இருந்தன. 

அந்தப் பேனாவில் நறுமணங்களும், கஸ்தூரியும் நிரப்பப்பட்டு இருந்தது;  அங்கிருந்த கூட்டத்தினர் ஒவ்வொரு பேனாவாக எடுத்துக் கொண்டார்கள்; நானும் முன்னோக்கிச் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன்.

அப்பொழுது நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் ஒரு பேனாவை கொடுங்கள்" என்று கேட்டேன். 

அதற்கு அவர்கள், "உமக்கு நான் எப்படி கொடுப்பேன்! நீர்தான் எனது கல்வி நிறைந்த நூல்களை புதைத்து விட்டீரே !" என்று கூறினார்கள்.

நூல் : அல் பஸாயிறு வத் தகாயிறு

ஹஸன் பின் உஸ்மான் அல் கின்திரீ (ரஹ்) அவர்கள் இபாதத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக எழுதுவது, படிப்பது போன்றவற்றை ஒதுக்கி வைக்கும் முகமாகவே நூல்களைப் புதைத்தார். 

பெருமானார் (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி பேனாவை வழங்காததினால் அவர் இபாதத், இஜ்திஹாத் - மார்க்க விஷயங்களை மனதால் ஆய்வு செய்வது ஆகியவற்றுக்கு நிகரானது தான்  கல்வி கற்பது, எழுதுவது, படிப்பது எனப் புரிந்து கொண்டார். 

எனவே மார்க்கக் கல்வி கற்பது தொழுவது, நோன்பு நோற்பது போன்றவற்றுக்கு சமமானது ஆகும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்