கப்பல் ஓட்ட வேண்டிய தமிழர் ஹாஜி ஃபக்கீர் முஹம்மது ராவுத்தர்
இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்
கப்பல் ஓட்டிய தமிழர்
ஹாஜி ஃபக்கீர் முஹம்மது ராவுத்தர்
==================================
இந்தியர்கள் தனியாக கப்பல் வைத்திருக்க வேண்டும்; அதன் மூலமாகவும் வெளிநாட்டு வணிகங்களை செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக
பொருளாதார தேசபக்தியை (Economic Nationalism)
கையில் எடுத்தார்கள்.
அதே நேரம் பிரிட்டிஷ் British India Steam Navigation Company (BISNC) என்ற கம்பெனியின் கடல் போக்குவரத்து ஆதிக்கத்தை உடைப்பது மட்டுமின்றி அதை புறக்கணிக்கவும் வேண்டும் எனவும் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்பாளர்கள் முடிவு செய்தார்கள்.
அதற்காக 1906 ஆம் ஆண்டு சுதேசி ஸ்டீம் நெவிகேஷன் கம்பெனி (Swadeshi Steam Navigation Company - SSNC ) எனும் பெயரில் தூத்துக்குடியில் இந்த கம்பெனியை நிறுவினார்கள். இந்த கம்பெனியில் 15 பேர் கொண்ட நிர்வாக சபை இருந்தது.
அதில் துணைச் செயலாளராக வ. உ. சிதம்பரனார் பிள்ளை இருந்தார். இதன் செயலாளராகவும் இரண்டு லட்சம் ரூபாய்களை நன்கொடையாகவும் கொடுத்தவர் ஹாஜி முஹம்மது ராவுத்தர் என்பவர் ஆவார்.
ஆறு மாத காலமாக இந்தியா என்னும் பத்திரிகை மூலம் பாரதியார் அவர்கள் சுதேசி கப்பல் வாங்குவதற்காக வசூலித்தத் தொகை சுமார் 5000 ரூபாய் மட்டுமே!( 215 ரூபாய் 13 ஆனா என்றும் ஒரு கூற்று உள்ளது)
முதலில் எஸ். எஸ். கலியா (S.S. Gallia ) என்ற கப்பலை ஃபிரான்சிலிருந்து வாங்கி தூத்துக்குடிக்கும் இலங்கைக்குமாக பயணிகள் கப்பலாக விட்டார்கள்.
பின்னர் எஸ். எஸ். லவோ (S.S. Lawoe) என்ற பெயரில் மற்றொரு கப்பலை வாங்கி இதே வழித்தடத்தில் விட்டார்கள்.
சுதேசி கப்பல் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் 1908 ஆம் ஆண்டு வ. உ. சிதம்பரனார் பிள்ளை அவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்கள்;
அவரை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் முஹம்மது யாசின் எனும் இஸ்லாமியர் வெள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
துணைச் செயலாளராக இருந்தவரை பெரிதாகப் பேசுவார்களா? அல்லது செயலாளராக இருந்தவரை பெரிதாகப் பேசுவார்களா நீங்களே சொல்லுங்கள்.
செயலாளராக இருந்தவரைதானே இந்த சமூகம் பெரிதுபடுத்தி கௌரவித்து கண்ணியப்படுத்தி இருக்க வேண்டும்?
அதிகமாக காசு கொடுத்தவரை தானே இந்த சமூகம் வானளாவப் புகழ்ந்து பெரிது படித்திருக்க வேண்டும்?
அப்படி என்றால் ஒரு முஸ்லிமின் பெயர் எந்த வகையிலும் பெரிதாகப் பேசப்பட்டு விடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்களும், மற்றவர்களும் எவ்வளவு கவனமாக ஒரு இஸ்லாமியரின் பெயரை மறைத்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
வ. உ. சிதம்பரனார் பிள்ளை அவர்கள் மீது நமக்கு எந்த பொறாமையும் இல்லை; அவரும் புகழப்படுவதற்கும், மிகப்பெரிய அளவில் பேசப்படுவதற்கும் தகுதியானவர் தான்; அதை நாம் குறை கூறவில்லை;
ஆனால் ஒரு முஸ்லிமை மறைத்ததும் மறக்கடிக்கச் செய்ததும் தவறு தானே?
ஏதேனும் ஒரு பாட நூலில் அல்லது வரலாறு போதிக்கப்படும் கல்லூரி நூல்களில் ஒரு முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரரை குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா?
டெல்லி இந்தியா கேட்டில் ஏறத்தாழ 95,300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் இருக்கின்றன; அதில்
61,945 பெயர்கள் இஸ்லாமியர்க ளுடையது என அரசு ஆவணங்கள் சாட்சி சொல்கிறது;
ஆனால் ஒரு முஸ்லிமுடைய பெயர் கூட எந்த ஆட்சியாளர்களாலும் சுதந்திர தினத்தன்று பேசப்படுவதில்லை; படங்கள் திறக்கப்படுவதில்லை.
Comments
Post a Comment