இமாம் புகாரி (ரஹ்) அவர்களை எதிர்பார்த்து நிற்கிறேன்:

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 49

39. இமாம் புகாரி (ரஹ்) 
அவர்களை எதிர்பார்த்து நிற்கிறேன்:
=============≠====================

அப்துல் வாஹித் பின் ஆதம் அல் தவாவீசீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

ஒரு நாள் கனவில் நபி (ஸல்) அவர்களை நான் பார்த்தேன்; அவர்களோடு ஸஹாபாக்களில் இருந்தும் ஒரு கூட்டத்தினர் நின்றிருந்தார்கள். நபிகள் நாயகம் அவர்கள் மற்றொரு இடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். 

நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன்; அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். 

"அல்லாஹ்வின் தூதரே! ஏன் இங்கே நிற்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி (ரஹ்) அவர்களின் வருகையை எதிர்பார்த்து நிற்கிறேன்" என்று கூறினார்கள். 

சில நாட்களுக்கு பிறகு இமாம் புகாரி ரஹ் அவர்கள் இறந்து போய்விட்ட செய்தியை அறிந்தேன்; அது நான் எந்த இரவில் நபி ஸல் அவர்களை கனவில் பார்த்தேனோ அந்த நாளில் தான் அவர்கள் இறந்திருக்கிறார்கள்.

நூல்: ஷதராதுத் தஹபி ஃபீ அக்பாரி மின் தஹபி

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Blogger: Posts

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்