நான் சந்தித்தது போல் எனானை ஏன் சந்திக்க வரவில்லை
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>
மாதம் : 8
தொடர் : 57
நாம் சந்தித்தது போல்
நீர் ஏன் சந்திக்க வரவில்லை :
அல் ஜுன்தீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; இமாம் அபூ பக்ர் அஸ் ஸிக்ஸிகீ (ரஹ்) அவர்கள் ஒரு வருடம் ஹஜ்ஜுக்கு சென்று இருந்தார்கள்; மதீனாவிற்கு சென்று நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.
அதனால் அவருக்கு ஒரு மன நெருக்கடியும், தீராத மன வருத்தமும், கவலையும் உண்டாகி இருந்தது.
இந்நிலையில் இருந்த அவர்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள்; அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "அபூபக்ர் அவர்களே! நான் உங்களை சந்திக்க வந்திருப்பது போன்று நீங்கள் ஏன் என்னை சந்திக்க வரவில்லை" என்று கேட்டார்கள்.
அபூ பக்ர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீதுள்ள கண்ணியம் மற்றும் நம்பிக்கையின் பொருட்டால் எனக்கு /ஏற்பட்ட நிற்பந்த நிலைக்காக நான் அவ்வாறு செய்து விட்டேன்.
எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! நான் வந்து உங்களை சந்திக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தம்மை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : அல் பஸாயிறு வத் தகாயிறு
மக்காவில் ஹிஜ்ரீ 790 க்கு பிறகு வாழ்ந்த இமாம் அபூபக்ர் அஸ் ஸிக்ஸிகீ (ரஹ்) அவர்கள் பலமுறை நபி (ஸல்) அவர்களை சென்று ஜியாரத் செய்திருக்கிறார்கள்.
ஆனாலும் ஒரு ஹஜ்ஜை செய்துவிட்டு நபிகளாரை சந்திப்பது சுன்னத் ஆகும். அதை அவர் செய்யாததினால் தான் நபி (ஸல்) அவர்கள் உரிமையோடு கனவில் காட்சியளித்து, ஒரு சுன்னத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டு இருக்கிறார்கள் என்பதாக இந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611
http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ
Comments
Post a Comment