நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மந்திரி சபையில் ஐந்து முஸ்லிம்கள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 
மந்திரி சபையில் ஐந்து முஸ்லிம்கள்
==================================
 

இந்தியாவில் சுதந்திர போர் பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

ஜனநாயக முறைப்படி போராட்டம், உப்பு சத்தியாகிரகம், ரயில் மறியல், கள்ளுக்கடை மறியல், ஒத்துழையாமை, கொடி போர், அஹிம்சை, சுதேசி என பல பெயர்களில் பல நபர்களால் அன்றைய இந்தியாவான மியான்மர், பங்களாதேஷ், பாகிஸ்தான், இன்றைய இந்தியா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் உட்பட இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நடந்து கொண்டிருந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆயுத வழி போராட்டம் நடத்தினார்கள்.

ஆயுத வழி போராட்டத்தை மேம்படுத்துவதற்காக 21/ அக்டோபர் / 1943 அன்று ஆசாத் ஹிந்த் அரசு Azad Hind Arasu எனும் பெயரில் ஒரு அரசாங்கத்தை நிறுவினார். 

இதற்குள் ஒரு அரசாங்கம் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து உட்பிரிவுகளையும் நிறுவினார்;  அதில்
தேசிய இராணுவம் (INA – Indian National Army) பிரிவையும் நிறுவினார்.

மேலும் 20 மந்திரிகளை கொண்ட ஒரு மந்திரி சபையை அமைத்தார். அவர்களில் ஐந்து பேர் முஸ்லிம்கள் ஆவர். 

1.  இஹ்ஸான் காதிரி 
2.  ஷாநவாஸ்கான் 
3.  அறிஞர் M.Z. கரீம் கனி இளையான்குடி 
4.  அஜீஸ் அஹமது 
5.  N.S. ஃபஹத்

அன்றைய இந்தியாவில் 25 % சதவீதம் பேர் முஸ்லிம்கள் இருந்தார்கள்; அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தமது மந்திரி சபையில் 25 % சதவீதம் அளவிற்கு 5 மந்திரிகளை இடம்பெறச் செய்தார்.

இந்த அரசாங்கத்தை வழி நடத்துவதற்காக சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று  நிதி திரட்டினார். ஆனால் போதிய நிதி கிடைக்கவில்லை. 

ராணுவத்தை வழி நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கும் மற்றும் பல செலவினங்களுக்கும் போதிய பணம் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மியான்மரில் உள்ள பர்மாவிற்கு சென்றார்கள்; அங்கே முஸ்லிம்களும் செட்டியார்களும்தான் அதிகம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு உதவி செய்வதாக தெரிந்தாலே அவர்களை கைது செய்தும்,  அவர்களுடைய வியாபாரங்களை முடக்கியும் பிரிட்டிஷ் அரசு வதம் செய்து கொண்டிருந்த நேரம் அது. எனவே எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. அவரிடம் முகம் கொடுத்து பேசவும் முன் வரவில்லை.

இந்நிலையில் வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்களிடம் சென்று  நிலைமையை விளக்கினார். 

வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்கள், நீங்கள் எதிர்பார்த்து வந்திருக்கக் கூடிய தொகையில் இதுவரை எவ்வளவு கிடைத்திருக்கிறது என்று சொல்லுங்கள் மீதியை நான் தந்து விடுகிறேன்" என்று கூறினார்கள். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் நான் ஒரு கோடி ரூபாயை எதிர்பார்த்து வந்தேன்; ஆனால் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான தொகை கிடைக்கவில்லை" என்று கூறினார்.

வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்கள், "என்னிடம் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சொத்துகள் இருக்கின்றன; அவை அனைத்தையும் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன்; இதை வைத்து நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை முழுமையாக செய்து முடியுங்கள்" என்று கூறினார். 

தமது சொத்துகளை விற்றும், கையிருப்பு பணமாக இருந்ததை கொடுத்தும், நகைகளாக இருந்ததை வழங்கியும் தமது வாக்கை நிறைவேற்றினார். 

வெறும் கையோடு தமிழகத்திற்கு திரும்பிய இவருக்கு சொந்த வீடு இல்லை. இவர் இறந்து போகும்போது வாடகை வீட்டில் தான் இவரது ஜனாஸா இருந்தது. 

அன்று அவர் வழங்கிய ஒரு கோடி ரூபாய் என்பது இன்று பத்தாயிரம் கோடிகளுக்கு சமமானது என்று சொன்னால் மிகை அல்ல!

ஒரு போரின் போது நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் உதவி கோரினார்கள்; அவரவரும் அவரவருடைய வசதிக்கு ஏற்ப போருக்கான நிதியை கொடுத்தார்கள்.

அந்த போருக்கான நிதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் கொண்டு வந்து நபிகளாரின் காலடியில் சமர்ப்பித்தார்கள். 

வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்களின் செயலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் செயலுக்கு ஒத்து இருக்கிறது.

இவ்வளவு உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கிய இஸ்லாமியர்களை இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் மாற்றான் தாய் பிள்ளையாகவே பார்த்தும், நடத்தியும் வருகின்றது; இந்த வேதனை எப்பொழுது திருமோ?

(மியான்மர் 1937 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.)

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்