நபிகள் நாயகம் ரசித்த கவிதை :
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
தொடர் : 8
.
53. கவிதையினால் அல்லாஹ் மன்னித்து விட்டான் :
ஹிஜ்ரீ 60 களில் வாழ்ந்த ஸஅதுல் அஸதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது
நபி ஸல் : மக்களில் நீ யார்?
நான் : அரபு கோத்திரத்தைச் சேர்ந்தவன்....
நபி ஸல் : அது தெரியும்... அரபு கோத்திரத்தில் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்....
நான் : பனீ அஸத் கோத்திரத்தைச் சேர்ந்தவன்....
நபி ஸல் : பனி அஸத் கோத்திரத்தாரில் குசைமா - بنى خزيمة கோத்திரத்தை சேர்ந்தவரா?
நான் : ஆமாம்.....
நபி ஸல் : அப்படி என்றால் ....நீர் எனது குடும்பத்தாரில் ஒருவர்.... அப்படித்தானே....
நான் : ஆமாம்....
நபி ஸல் : கும்மியத் பின் ஸைத் தை உமக்குத் தெரியுமா?
நான் : அல்லாஹ்வின் தூதரே! ஆமாம் ! எனக்கு தெரியும்; அவர் எனது கோத்திரத்தாரில் ஒருவர்; எனது தாய் மாமன்களில் ஒருவரும் கூட.....
நபி ஸல் : அவருடைய கவிதைகளில் ஏதேனும் உமக்கு மனப்பாடமாக இருக்கின்றதா?
நான் : ஆமாம்!... எனக்கு தெரியும்...
நபி ஸல் : அவற்றில் இருந்து எனக்கு கொஞ்சம் பாடிக் காட்டுங்கள்....
طربت، و ما شوقا إلى البيض أطرب و لا لعبا منّى، و ذو الشّيب يلعب؟
எனும் கவிதையில் தொடங்கி
فمالى إلّا آل أحمد شيعة
و مالى إلا مذهب الحقّ مذهب
எனும் கவிதை வரை படித்தேன்.
நபி ஸல் : "நீர் நல்ல காரியம் செய்தீர்...! அவருக்கு என் ஸலாம் சொல்லுங்கள்! இந்த கவிதைகளின் பொருட்டால் அல்லாஹ் உங்களுடைய பாவங்களை மன்னித்து விட்டான் என்றும் சொல்லுங்கள்" என என்னிடம் கூறினார்கள்.
நூல் : கஸானதுல் அதப் , அல் அஙானீ.
சமூகத்திற்கு பயனுள்ள கருத்துகளை கவிதை வடிவங்களில் சொன்னாலும் அது அல்லாஹ் மற்றும் ரசூலிடம் அங்கீகாரம் பெறும் என்பதற்கு இந்த வரலாறு ஒரு சாட்சி!
Comments
Post a Comment