இப்னு பத்தாவின் மத்ஹப்......:
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>
மாதம் : 8
தொடர் : 55
இப்னு பத்தாவின் மத்ஹப்......:
=============≠====================
ஹிஜ்ரீ 350 களில் வாழ்ந்த அபு முஹம்மதுல் ஜவ்ஹரீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது ; எனது சகோதரர் அபூ அப்துல்லாஹ் அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அவர் சொன்னார்; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எந்த மத்ஹப் சிறந்தது? அல்லது எந்த மத்ஹப்பில் நான் இருக்க வேண்டும்" எனக் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்னு பத்தா" என்று கூறினார்கள்.
நான் பக்தாதிலிருந்து புறப்பட்டு அக்பரா எனும் ஊருக்குச் சென்றேன்; அது ஒரு ஜும்ஆவுடைய நாளாக இருந்தது; நான் அபூ அப்துல்லாஹ் பின் பத்தா அவர்களை அந்த ஊரில் உள்ள ஜாமிஆ பள்ளிவாசலில் சந்திக்க விரும்பினேன்; நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததை அவர் பார்த்ததும், "நபி (ஸல்) அவர்கள் உண்மையைச் சொன்னார்கள்; நபி (ஸல்) அவர்கள் உண்மையைச் சொன்னார்கள்" என்று கூறி வரவேற்றார்கள்.
நூல் : தபகாதுல் ஹனாபிலா
மத்ஹப் என்பது வாழ்க்கை பாதை எனப் பொருள். இப்னு பத்தா (ரஹ்) அவர்கள் இவ்வுலகில் இஸ்லாத்தை பின்பற்றி வருவதைப் போன்று அபூ அப்துல்லாஹ்வும் பின்பற்றி வரலாம் என நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்னு பத்தா அவர்கள் பல்வேறு இஸ்லாமிய கொள்கை சார்ந்த நூல்களை இயற்றியிருக்கிறார்கள். வாழும் பொழுதும், எழுதும் பொழுதும் கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611
Comments
Post a Comment