அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொல்லுங்கள்
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 8
தொடர் : 67
அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு சொல்லுங்கள்:
==============================
பனூ ஸலீம் கோத்திரத்தாரிலிருந்து ஒரு ஷைகு கூறினார்; எனது கனவில் நபி (ஸல்) அவர்களை நான் கண்டேன்;
அப்பொழுது, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?' என்று நான் கேட்டேன்; அதற்கு அவர்கள், 'உனக்கு நான் எனது நிலை குறித்து சொல்லவா?' என்று கேட்டார்கள்; நான் 'ஆம்!' சொல்லுங்கள்" என்று கேட்டேன்.
"யார் தனது இன்றைய நாளை வீணடிக்கிறாரோ அவர் பெரும் நஷ்டத்தில் தள்ளப்படுவார்;
நாளைய தினத்தை தவறாக கழிக்க யார் திட்டமிடுகிறாரோ அவர் சபிக்கப்படுவார்;
ஒவ்வொரு நாளும் தன்னில் நற்செயல்களை யார் அதிகரித்துக் கொள்ளவில்லையோ அவர் பெரும் சரிவை சந்திப்பார்;
ஒவ்வொரு நாளும் யார் தன்னை குற்றங்களில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறாரோ அவர் இருப்பதை விட இறப்பதே சிறந்தது" என்று கூறினார்கள்.
நூல்: லுபாபுல் அல்பாப்,
கிதாபுல் மனாமாத்
ஒவ்வொருவரும் தனது நேரத்தை பயன் மிக்க வழிகளில் செலவழித்து வர வேண்டும்; இல்லை என்றால் இரு உலகத்திலும் பெரும் நஷ்டமே மிஞ்சும்.
நபி (ஸல்) அவர்கள் கூறிய நான்கு உபதேசங்களின் அடிப்படையில் தாம் சிறப்பாக செயல்பட்டு வாழ்ந்ததால் தாம் இப்பொழுது சிறப்பாகவே இருப்பதாக, அதையும் ஒரு உபதேசத்தின் மூலமாக சொல்லிக்காட்டி இருக்கிறார்கள் என்பதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611
http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ
Comments
Post a Comment