நற்செயல்கள் வீணாகாது

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 9

தொடர் : 63

நற்செயல்கள் வீணாகாது
==============================

ஹதீஸ் துறையில் சேவையாற்றி வந்த சிந்தனையாளர் ஒருவர் இறந்து போய்விட்டார்; அவர் குறித்து அபுந் நஸ்ரு அல் வாயிழ் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது;

அவர்கள் சொன்னார்கள்; நபித்தோழர்களோடு நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; உஸ்தாத் அபூ ஸஹல் அல் ஸஃலூகீ (ரஹ்) அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர்களை நலம் விசாரிக்கும் நோக்கில் நபித்தோழர்களும் நபிகளாரும் வந்திருந்தார்கள்; 

நானும் அவர்களை பின்துயர்ந்து உஸ்தா த் அவர்கள் இருந்த இல்லத்திற்குச் சென்றேன்; நபி (ஸல் ) அவர்களுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தேன். 

அப்பொழுது நான் எனது மனதில், "இந்த உஸ்தாத் ஹதீஸ் துறைக்காக மிகப்பெரும் பணியாற்றி இருக்கிறார்; அவர் இறந்து விட்டால் அவர் செய்து வந்த பணியில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என என் மனதில் நான் நினைத்தேன்.

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "அது விஷயமாக நீங்கள் ஒன்றும் கவலையோடு சிந்திக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் நற்செயல்களை வீணடிக்க மாட்டான்; அது மட்டுமின்றி அத்துறையின் தலைவரே நான் தான்" என்று கூறினார்கள்.

நூல்: அத்தந்வீன் ஃபீ அக்பாரி கஸ்வீன்

பொதுவாகவே உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பழைய மனிதர்கள் இறக்கிற போது இறந்தவர் காலத்தில் இருந்த அறிவு, தெளிவு, ஞானம் ஆகியவற்றில் கொஞ்சம் அவரோடு மறைக்கப்படுகிறது. 

அதேநேரம் அவர் இறந்த நிகழ்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் புதிய வகையிலான அறிவு, தெளிவு, ஞானம் ஆகியன புதுப்பொலிவுடன் வெளிப்பட்டிருக்கும். 

ஆனாலும் கூட பழைய வகையிலான அறிவு, தெளிவு, ஞானம் ஆகியவற்றின் அழிவு நிகழ்கால மனிதனின் பேரிழப்பாகும்.

சிக்கி முக்கி கல்லால் நெருப்பு மூட்டிய அறிவு, இப்பொழுது நம்மிடம் இல்லாமல் போனது இழப்பு தானே!

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்