தொண்டர்களை நேசித்த தலைவர்

தொண்டர்களை நேசித்த தலைவர் 
=================================

எவ்வளவு நீளமான ஆறாக இருந்தாலும் அது ஒரு நாள் கடலில் சென்று கலக்க வேண்டும். மனிதனும் அப்படித்தான் ஒரு நாள் மரணத்தைத் தழுவித்தான் ஆகவேண்டும். 

ஆனால் 'அந்தக்' கடலில் கலக்கு முன்பாக அவன் எவ்வளவு மக்களுக்குப் பயன்பட்டிருக்கிறான், எத்தனை மக்கள் அவனை நேசித்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

அந்தவகையில் தொண்டர்களை நேசித்த ஒரு தலைவரின் நேசத்தை பாருங்கள்.

حدثني إياس بن سلمة. حدثني أبي قال:
قدمنا الحديبية مع رسول الله . ونحن أربع عشرة مائة. وعليها خمسون شاة لا ترويها. قال: فقعد رسول الله على جبا الركية. فإما دعا وإما بسق فيها. قال: فجاشت. فسقينا واستقينا. قال: ثم إن رسول الله دعانا للبيعة في أصل الشجرة. قال فبايعته أول الناس. ثم بايع وبايع. حتى إذا كان في وسط من الناس قال (بايع. يا سلمة!) قال قلت: قد بايعتك. يا رسول الله! في أول الناس. قال (وأيضا) قال: ورآني رسول الله عزلا (يعني ليس معه سلاح). قال: فأعطاني رسول الله حجفة أو درقة. ثم بايع. حتى إذا كان في آخر الناس قال (ألا تبايعني؟ يا سلمة!) قال: قلت: قد بايعتك. يا رسول الله! في أول الناس، وفي أوسط الناس. قال (وأيضا) قال: فبايعته الثالثة. ثم قال لي (يا سلمة! أين حجفتك أو درقتك التي أعطيتك؟) قال قلت: يا رسول الله! لقيني عمي عامر عزلا. فأعطيته إياها. قال: فضحك رسول الله وقال (إنك كالذي قال الأول: اللهم! أبغني حبيبا هو أحب إلي من نفسي).

இயாஸ் பின் ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஹுதைபியா உடன்படிக்கையின் போது நாங்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தோம். 

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்கள் அனைவரையும் பைஅத் - ஒப்பந்தம் செய்யும்படி அழைத்தார்கள். நான் எழுத்துச் சென்று முதன்முதலில் பைஅத் செய்தேன்.

பின்னர் நான் சென்று மக்களிடையே நின்று கொண்டேன். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, "ஸலமா வந்து பைஅத் செய்!" என்று அழைத்தார்கள்.

(உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை அறிந்து, அவர்களுக்கு ஆதரவாக போர் மேகம் சூழ்ந்த நிலையில் பரபரப்பாக இருந்ததின் காரணமாக நபிகளார் மறந்து விட்டார்கள் போலும்)

"அல்லாஹ்வின் தூதரே! நான் ஏற்கனவே முதன் முதலில் உங்களிடம் பைஅத் செய்து விட்டேன்" என்று சொன்னேன்.

"பரவாயில்லை! மீண்டும் பைஅத் செய்யுங்கள்" என்று என்னை அழைத்தார்கள். நான் மீண்டும் பைஅத் செய்தேன்; அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாததை பார்த்து விட்டு எனக்காக ஒரு கவச உடையை வழங்கினார்கள்.

பின்னர் நான் மக்களில் கடைசியில் நின்று கொண்டேன்; சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் என்னை நபி (ஸல்) அவர்கள், "ஸலமா வாருங்கள் பைஅத் செய்யுங்கள்!" என்று அழைத்தார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! முதல் முதலாகவும், இடையில் ஒரு முறையும் என இரண்டு முறை ஏற்கனவே பைஅத் செய்து விட்டேன்" என்று நான் சொன்னேன். 

(பைஅத் செய்தவர்களிடம் ஆயுதங்கள் இருக்கும்; இவரிடம் ஒன்றும் இல்லாததை பார்த்த நபிகள் நாயகம் அவர்கள் இவர் இன்னும் பைஅத் செய்யவில்லை போலும் என எண்ணி  மீண்டும் அழைத்தார்கள்.)

இவ்வாறு சொல்லிக்கொண்டே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது நபிகள் நாயகம் அவர்கள், "மீண்டும் நீ ஒரு முறை பைஅத் செய்! ஏற்கனவே  உனக்கு நான் ஒரு கவச உடை வழங்கி இருந்தேனே அது என்னவானது?" என்று கேட்டார்கள். 

"அல்லாஹ்வின் தூதரே! எனது மாமா எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்தார்; எனவே அதை நான் அவருக்கு கொடுத்து விட்டேன்; இன்று நான் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு பின்னர், "முற்காலத்தில் ஏற்கனவே ஒருவர் சொன்னது போல் இருக்கிறது;

اللهم! أبغني حبيبا هو أحب إلي من نفسي

இறைவா எனக்கு ஒரு நேசரை கொடு! அவர் தன்னை விட என்னை அதிகம் நேசிப்பவராக இருக்க வேண்டும்' என்று சொன்னது போல் இருக்கிறது" என்று கூறினார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்