ஹைதராபாத் சார்மினார் கட்டிடம் முஸ்லிம்களின் நினைவுச் சின்னம்



ஹைதராபாத் சார்மினார் கட்டிடம் 
முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் 
==================================

இந்தியாவின் முதல் பத்து நினைவுச் சின்னங்களில் நான்கு இஸ்லாமியர்கள் கட்டியதாகும். அதில் முதன்மையானது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். 

இரண்டாவது; UNESCO Heritage - உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான குதுப் மினார். மூன்றாவது; டெல்லியில் கட்டப்பட்டுள்ள செங்கோட்டை . நான்காவது; ஹைதராபாத்தில் அமைந்துள்ள சார்மினார்; வாருங்கள் இந்தச் சார்மினார் குறித்து விரிவாகக் காண்போம்.

1518 - 1637 காலகட்டங்கள் வரை சுமார் 117 ஆண்டுகள் குதுப் சாஹி வம்சம் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். இவர்கள் பூர்வீகம் துருக்கி ஆகும்.

‌இவர்களில் சுல்தான் அலி குதுப்ஷா 1580 - 1612 காலகட்டத்தில் கோல் கொண்டா நகரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். 

இவர் வாழ்ந்த காலத்தில் பிளேக் நோய் நகரெங்கும் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்தார்கள்.

மக்களின் மரணத்தை தடுத்து நிறுத்த இயலவில்லையே என வருந்தி எல்லாம் வல்ல இறைவனிடம் "இறைவா! இந்த நோய் மேலும் பரவாமல், பெரும் அழிவை ஏற்படுத்தாமல் கடந்து விட்டால் நான் உனக்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறேன்" என நேர்ச்சை செய்து கொண்டார். 

அவ்வாறே பிளேக் (plague) நோய் சில வாரங்களில் கோல் கொண்டா (Golconda Fort) நகரை விட்டும் நகர்ந்து சென்றது.

நேர்ச்சை செய்தது போல் கட்டி முடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் இன்றுள்ள சார்மினார் கட்டிடத்தை ஒரே வருடத்தில் கி .பி. 1591இல் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இவர் சார்மினாரை கட்டும் பொழுது இதை கட்டுப்படுகிற இடத்தில் ஒரு புதிய நகரை உருவாக்க வேண்டும் எனவும் எண்ணியே கட்டினார்.

சார்மினார் கட்டிட அமைப்பு :
===========================

சார் மினார் - நான்கு மினாராக்கள் / நான்கு கோபுரங்கள் உள்ள சதுர வடிவில் முஸி ஆற்றங்கரை ஓரம் அமையப் பெற்றுள்ள அழகிய கட்டிடம். Indo Islamic -  இஸ்லாமிய, பாரசீக, இந்திய கலாச்சாரக் கலவையில்  கட்டப்பட்டுள்ளது.

இதன் ஒவ்வொரு பக்கமும் 20 மீட்டர் -  70 அடி நீளம் கொண்டது. இதன் உயரம் 48.7 மீட்டர் - 160 அடி உயரம் கொண்டது.

நான்கு மினாராகுள்ளும் மேலேறி செல்வதற்கு ஏற்ற வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மினாராவிற்குள்ளும் மூன்று தளங்கள் இருக்கின்றன. இவை தியான மண்டபங்கள்  /  திக்ரு மஜ்லிஸ்கள் செய்வதற்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் மேல் தளத்தின் மேற்கு பக்கம் நாற்பது பேர்  தொழுவதற்கு ஏற்ற வகையிலும், கிழக்குப் பக்கம் அதே அமைப்பிலும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மிஹ்ராப் - இமாம் நின்று தொழ வைக்கும் இடமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாங்கு மேடை மிக மிக அழகான வடிவமைப்பிலும், சித்திர வேலைபாடுகளுடனும் கட்டப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மார்க்க கல்வி பயில்வதற்கான மதரஸா -  விசாலமாக அமைய பெற்றுள்ளது.

நான்கு fillers தூண்களில் இந்த கட்டிடம் நிற்கின்றது. இரண்டு தூண்களுக்கு இடையே மிஹ்ராப் வடிவத்தில் ஆர்ச் ( arch )  அமையப் பெற்றுள்ளது; இதனால் நான்கு திசைகளிலும் ஆர்ச் உள்ளது.

இந்த நான்கு புறங்களிலும் நான்கு சாலைகள் அமைக்கப்பட்டு  கடைத்தெருக்களும், பஜார்களும் அமையப்பெற்றுள்ளது.

நான்கு தூண்களில் நிற்கும் இந்த சார்மினார் கட்டிடத்தின் ஆக மேல் பகுதி கும்பா -  வட்ட வடிவில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்பகுதியில் மிகுந்த வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நான்கு மினாராக்கள், ஒவ்வொரு மினாராவிலும் உள்ள மூன்று தலங்கள், பள்ளிவாசல், பாங்கு சொல்லும் மேடை , குவிமாடம் -  Dhoom , மிஹ்ராப், வளைந்த வாயில்களின் மேல் பகுதி / arch, உள்புற சுவர்கள்  போன்ற ஒவ்வொரு இடத்திலும் யா அல்லாஹ், யா முஹம்மத் என்றும், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் இக்லாஸ், சூரத்து யாஸீன் மற்றும் சில வசனங்கள் Islamic calligraphy /  Arabic inscriptions /  இஸ்லாமிய கேலியோகிராபி -  அழகான வடிவில் அரபு எழுத்துகளை எழுதி இருக்கிறார்கள். 

இந்த திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஸ்டுக்கோ (stucco) மற்றும் அழகான கற்கள் பதிக்கப்பட்டு ( stone carving ) நேர்த்தியான வடிவமைப்பில் அமையப்பெற்றுள்ளது.

இது கட்டிடக் கலையை விளக்கும் சின்னமல்ல! இஸ்லாமிய மதச் சின்னமாகவும், குத்துப் ஷாஹி வம்சத்தின் அடையாளமாகவும் இது கட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்பகுதியில் கோல் கொண்டா நகரம் செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் பார்வைக்கு எப்பொழுதும் திறப்பதே இல்லை. 

முஸி ஆற்றில் இருந்து இந்தப் பள்ளிவாசலின் அடி பாகத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உளூ செய்து கொள்ளலாம்.

இன்று இந்தியாவின் அடையாளமாகவும் ஹைதராபாத் நகரின் நினைவுச் சின்னமாகவும் (symbol) , ஹைதராபாத் நகரத்தின் மையப் பகுதியை (City centre ) சுட்டிக் காட்டும் வகையிலும் அமையப் பெற்றுள்ளது. 

இரவு நேரங்களில் அழகான ஒளி விளக்குகள் ஏற்றப்படுகிறது; அது காண்போரை ஈர்க்கு வண்ணம் மிக அழகாகக் காட்சியளிக்கிறது. இதை சார்மினார் நகரம் என்றும் அழைக்கின்றனர்.

6/9/2025 அன்று சென்றிருந்தேன்; சார்மினார் அமைந்துள்ள பகுதி முழுவதும் முஸ்லிம்களே மிகுதகமாக வாழ்கிறார்கள்; ஆனால் விநாயகர் ஊர்வலம் இந்தப் பகுதியில் தான் கோலாகலமாக நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்