என்னைப் பற்றி சொல்லுங்கள்!

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>
மாதம் : 8

தொடர் : 66

என்னைப் பற்றி சொல்லுங்கள்!
==============================

ஷைகு அப்துல் கனீ அந்நாபிலிஸீ (ரஹ்) அவர்கள் நினைவு கூருவதாவது; ஷைகு ரிழ்வான் அஸ்ஸிபாகி (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தார்கள். 

லெபனான் நாட்டில் பஸீதா நகரில் உள்ள அல் உமரீ எனும் பெரிய பள்ளிவாசலில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். 

அவர்களில் ஒருவர், "ரிழ்வான் அவர்களே! நீங்கள் உள்ளே செல்லுங்கள்; நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் பேச வேண்டும் என்று கூறினார்கள்" என சொன்னார்.

பின்னர் இருவரும் உள்ளே சென்றார்கள்; ரிழ்வான் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்; பெருமானார் அவர்கள் ரிழ்வானை பார்த்ததும், "ரிழ்வான் அவர்களே! என்னைப் பற்றிய செய்திகளை மக்களிடம்  சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு, "வாழும் வரை வாழ்! பிறகு நீ மரணிப்பாய், 

நீ எதை ஆசைப்படுகிறாயோ அதை விரும்பு, நிச்சயமாக நீ ஒரு நாள் அவற்றை விட்டும் பிரிந்திடுவாய், 

நீ என்ன வேண்டுமானாலும் செய்! நிச்சயமாக நீ அதற்காக கூலி வழங்கப்படுவாய்" என்று கூறினார்கள். 

உடனே அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னது போலவே வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்கள். 

நூல் : அல் முஸ்தத்ரக் , ஸலக துரரு ஃபீ அஃயானில் குர்ஆனி ஸானி அஷர

பொதுவாகவே அந்தப் பள்ளிவாசலில் சூஃபி ஞான போதனைகள், துறவறம், பற்றற்ற நிலை குறித்து ஞானவான்கள் பேசி மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருப்பார்கள். 

அந்தப் பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்த நபி (ஸல்) அவர்கள் அதைப் போன்றதொரு கருத்தை மீண்டும் சொல்லி, முன்னோர்கள் சொன்ன கருத்தை உண்மைப்படுத்திவிட்டு சென்று இருக்கிறார்கள்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்