தொடர் 11. மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி ஒரே யுகத்தின் இரு ஒளிகள்

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

நேற்றைய தொடர்ச்சி.....11

ஒரே யுகத்தின் இரு ஒளிகள்
----------------------------------------------------------
இமாம் ஜீலானி / 
ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ் 

°•°•°•°•

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது 73 வது வயதில் இருந்த போது மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். 

இருவரும் ஒரே காலகட்டத்தில் 19 வருடங்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். 

அதாவது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் கடைசி 19 வயதிலும், மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் முதல் 19 வயதிலும் என இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது 73 வது வயதில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்கள்; அதனால் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களுக்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை அறிந்திருந்தார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் சீர்திருத்தம் மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் இஸ்லாமிய ஒற்றுமை இயக்கத்திற்கு துணையாக நின்றது.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மனங்களை தட்டி எழுப்பினார்; ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பைத்துல் முகத்தஸ் மண்ணின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள், இமாம்  அல் யாஃபியீ (ரஹ்) அவர்கள், அஸ் ஸபன்ஜீ (ரஹ்) அவர்கள், அல் பிதாயா வந்நிஹாயா நூலில் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) போன்றவர்கள் மாவீரர்  ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என தமது நூல்களில் குறிப்பிடுகிறார்கள். 

மேலும் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் துஆவை எதிர்பார்த்து சந்தித்து இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிரதான கலீஃபாக்களில் சிலர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் ராணுவத்தில் இருந்ததாக உறுதியாகக் கூறுகிறார்கள்.

சூஃபி ஒளியும் சுதந்திர வாளும்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

இஸ்லாமிய வரலாற்றில் 12 - ஆம் நூற்றாண்டு (ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டு) மிக முக்கியமானது. ஆன்மீகமும் அரசியலும் கோலோச்சிய காலம் அது! வீரமும் ஆன்மீகமும் தானாக மலர்ந்த யுகம் அது!

ஒருபுறம் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மக்களிடையே ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி அவர்களின் உள்ளத்தில் இஸ்லாமிய தீபத்தை ஏற்றி வைத்தார்கள். 

மற்றொருபுறம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பைத்துல் முகத்தஸ் நிலத்தை மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய உம்மத்திற்காக மீட்டுக் கொடுத்தார்கள்;  ஒரே காலத்தில் வாழ்ந்த இருவரும் இஸ்லாமியர்களுக்கு இரு கண்கள் போன்று அவர். 

சிலுவைப் படையினரின் தொடர் தாக்குதல்களால் முஸ்லிம்களிடையே பிரிவினைகள் தோன்றியது மட்டுமின்றி ஆன்மீகத்தில் வீழ்ச்சி அடைந்து இருந்தவர்களை மாற்றியவர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள்.

இவர்களின் சீடர்கள் பல நகரங்களில் பரவி இருந்ததால் ஆன்மீகம் இஸ்லாமியர்களிடையே ஊடுருவியது. அதில் ஒருவரான ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களிடமும் சென்றடைந்திருந்தது.

பொதுவாகவே மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் ஆலிம்கள் சூஃபிகள் மார்க்க அறிஞர்கள் ஆகியோர் மீது மிகுந்த பற்றும் நெருக்கமும் கொண்டு விளங்கினார்கள்.

அவர்கள் இறைவன் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்தார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுடைய மனங்களை உயிர்ப்பித்தார்; மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பைத்துல் முகத்தஸ் மண்ணை உயிர்ப்பித்தார் .

இதை இஸ்லாமிய வரலாறு மற்றொரு வகையிலும் பதிவு செய்திருக்கிறது; இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மனங்களை வென்றார்கள்; மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் மண்ணை வென்றார்கள்.

நூல்: இமாம் அபுல்ஹஸன் ஷாதுலி ரஹ் அவர்கள் எழுதிய அல் லதாஇஃபூல் இலாஹிய்யா

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்