பஹ்ருல் உலூம்




பயான் செய்பவர்: நூரீ நாயகத்தின் கலீஃபா , உத்தமபாளையம் சார்ந்த அல்லாமா அல்ஆரிஃபுபில்லாஹ் 
கலீமுல் மலிக்_நாவக்கரசர் PSKM.இப்ராஹிம் பாக்கவீ (அன்வாருல்லாஹ்ஷாஹ் நூரீ) .

ஷமாயிலுத் திர்மதி,ஃபஜாயிலே ஸலவாத்து,ஹிகாயாதே ஸஹாபா போன்ற நூல்களை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து தந்தவர்கள்.

மேலும் அன்றைய காலகட்டத்தின் மீலாது விழா,கௌசு நாயகம் விழா, ஷரீஅத் மாநாடு, தரீகத் மாநாடு போன்ற நிகழ்வுகளில் சிறந்த பேச்சாளர் ஆகும்.

அதனால் தான் கலீமுல் முல்க் _ நாவக்கரசர் என்று பட்டம் சூட்டப்பட்டார்கள்.1984 ஆம் ஆண்டு வஃபாத் ஆகும்.
உத்தமபாளையத்தில் அடக்கம்.

நடுவில்: நூரீ நாயகத்தின் மூத்த கலீஃபா மற்றும் சம்மந்தர் ஆகும்.
அல்லாமா அல்ஆரிஃபுபில்லாஹ் ஆஷிகே ரசூல் சையது உமர் ஆமிர் கலீமீஷாஹ் நூரீ ஹஸனீ வல் ஹுசைனீ அல்ஜீலானீ கிப்லா அவர்கள் ஆகும். பல இலட்சம் முரீதுகள்,குலஃபாக்கள் இருக்கினறர். அன்னாரின் மிகப் பெரும் சிறப்பு இஷ்கே ரசூலை முரீதுகளின் உள்ளத்தில் நுழைந்தார்கள்.

இறுதியாக இருப்பது: 
முஜத்திதே தரீகத் நூருல் மஷாயிக் சையது நூரீஷாஹ் கிப்லா சிஷ்தியுல் காதிரீ ஹஸனீ வல் ஹுசைனீ அல்ஜீலானீ ஹைதராபாதீ அவர்கள் ஆகும். 

இவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சமாகும். மேலும் கௌசுல் அஃழம் பேரப்பிள்ளையாகும்.

இவர்கள் தான் மேற்கூறப்பட்ட மற்றும் ஹஜ்ரத் ஃபைஜீஷாஹ், ஹஜ்ரத் ஜமாலீஷாஹ், ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் புஹாரீ ஹுஜூரீஷாஹ், ஹஜ்ரத் ஜுஹூரீஷாஹ், ஹஜ்ரத் அப்துல் வதூத் முஹிப்பீஷாஹ், ஹஜ்ரத் ரஃபீகீஷாஹ் மற்றும் ஹஜ்ரத் சையது நிஜாமீஷாஹ் போன்ற பிரபலமான உலமாபெருமக்களுக்கெல்லாம் ஷைகு _ ஆன்மீக ஆசான் ஆகும்.

ஹஜ்ரத் நூரீ நாயகத்தின் சில்சிலா நூரிய்யா 40 நாடுகளில் பரவியுள்ளது. 

அன்னாரின் குலஃபாக்களே சுமார் 120 தாண்டும்.

அன்னாரின் வருகை தமிழகம்,கேரளாவிற்கு இல்லை என்றால், இந்த தரீகத் ஞானம் இல்லாமல் இருண்டு போயிருக்கும்.

نور الله مرقدهم ونفعنا بعلومهم واسرارهم وانوارهم وبركاتهم ومددهم وغيثهم يا رب محمد صلى الله عليه وسلم.

•°•°•°•°•°



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்களில் ஒருவரும் கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்களின் தம்பியுமான ஆசிரியத் மர்ஹூம் பஹ்ருல் உலூம் மௌலானா அல்லாமா A.K. முஹம்மது இப்ராஹிம் நூரிய்யி, ஃபாஸில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா 

 اللهم اغفر له وارحمه وسكنه في الجنة

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்