I LOVE ❤️ MUHAMMAD ஐ லவ் முஹம்மது

I LOVE ❤️ MUHAMMAD ஐ லவ் முஹம்மது 
SALLALLAHU ALAIHI WASALLAM 
=====================================

உ.பி. கான்பூர் மாவட்டம் ராவத்பூர் கிராமம் ஜாஃபர் வாலி காலி சந்துவில்  செப்டம்பர் 4 /9/25 ஆம் தேதி வியாழக்கிழமை மிலாதுன் நபிக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த ஒரு  தெருவின் நுழைவாயிலில் "I LOVE MUHAMMAD - நான் முகமதுவை நேசிக்கிறேன்" என்ற வாசகம் கொண்ட ஒரு லைட்போர்டு நிறுவப்பட்டது.

இதற்கு முந்திய வருடம் இதே ஐ லவ் முஹம்மத் எனும் சொல்லை ஒரு துணியில் எழுதி வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்; அப்பொழுது யாரும்  அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. 

இவ்வாண்டு மின்சார பதாகையை பள்ளிவாசலுக்கு அருகில் அனைவருடைய கண்களுக்கும் படும் வகையில் நிறுவி இருக்கின்றனர். 

இதையே ஊர்வலத்திற்கும் எடுத்து சென்றுள்ளனர் இந்து துவா வாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி அந்தப் பாதாகையை உடனே அகற்ற வேண்டும் எனவும் பிரச்சனை செய்துள்ளனர். 

உடனே காவல்துறை தலையிட்டு அந்த பதாகையை அகற்றி விட்டனர். 

நான்காம் தேதி தொடங்கிய பிரச்சனை ஆறாம் தேதி முடிவுக்கு வந்தது; இந்நிலையில் "செப்டம்பர் 9 ஆம் தேதி, சப்-இன்ஸ்பெக்டர் பங்கஜ் சர்மாவின் புகாரின் பேரில், உள்ளூர் போலீசார் 24 பேர் மீது வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தனர்," என்று ஃப்ரண்ட்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

 
இதற்குப் பிறகுதான் இந்த செய்தி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன் என நான் சார்ந்துள்ள மார்க்கத்தின் தலைவரை நேசிப்பதில் என்ன தவறு? எனக்கு உரிமை இல்லையா? என்ற வாதம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது.

ஓபி பரேலி மாவட்டத்தில் 26/9/2025 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு இத்திஹாத் மில்லத் கவுன்சில் அமைப்பின் தலைவர் மௌலானா தவ்கீர் ரஸா கான்  அவர்கள் தலைமையில் கோட் வாலி எனும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதற்கு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலுக்கு உள்புறத்திலேயே ஐ லவ் முஹம்மத் என்ற பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காவல்துறையினர் கோஷங்கள் எழுப்பக் கூடாது பதாகைகளை ஏந்தி க் கூடாது என தடுத்ததாலும் காவல்துறையினர் முஸ்லிம்களை விரட்டியதாலும் பள்ளிவாசலுக்குள் நடந்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் தெருவிற்கு வந்தது 

பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியும் கலவரத்தை புதிதாக ஆக்கினார்கள். 

அன்றைய தினம் ஏழு பேரை கைது செய்து 14 நாள் சிறையில் அடைத்தனர். பின்னர் வீடியோக்களின் ஆதாரங்களை வைத்துக் கொண்டு 70 பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். 

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அசாதுதீன் உவைசி  அவர்கள் செப்டம்பர் 15 அன்று X தளத்தில்  ஒரு பதிவில் “நான் முகமதுவை நேசிக்கிறேன்” என்று சொல்வது குற்றமல்ல என்றும், கான்பூர் காவல்துறையை நேரடியாக டேக் செய்வது என்றும் கூறியபோது இந்த பிரச்சினை அதிக கவனத்தை ஈர்த்ததாக ஃப்ரீ பிரஸ் காஷ்மீர் செய்தி வெளியிட்டுள்ளது .

"அவரது பதிவு அதிக விவாதத்தைத் தூண்டியது மேலும் இந்த சம்பவம் தேசிய கவனத்தை ஈர்த்தது, 

பின்னர் இந்த முழக்கம்  உத்தரகண்ட், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் பரவியது.

தி வயர் செய்தித்தாளின் கணக்குப்படி செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் 1,324 பேர் மீது குறைந்தது 21 FIRகளைப் பதிவு செய்து 38 பேரைக் கைது செய்துள்ளது என செய்தி கூறுகிறது.

"கேசர்கஞ்ச் (355 குற்றம் சாட்டப்பட்டவர்கள்), ஷாஜஹான்பூர் (200), பாக்பத் (150), கான்பூர் (24), கௌசாம்பி (3), உன்னாவ் (8), மகாராஜ்கஞ்ச் (64), பிலிபிட் (9), மற்றும் வாரணாசி (1) உட்பட பெரும்பாலான வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் இருந்தன. 

மற்ற மாநிலங்களில் கோத்ரா, குஜராத் (88), காஷிபூர் சமூக ஊடகங்களில் APCR ஆல் பகிரப்பட்டது மற்றும் அதன் அலுவலகப் பொறுப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 26-27 க்கு இடையில் பரேலியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சேர்க்கப்படவில்லை" என்று அவுட்லெட் தெரிவித்துள்ளது.

வாரணாசியில் ஜகத்குரு சங்கராச்சாரியார் நரேந்திரானந்தா அவர்கள் தலைமையில் ஐ லவ் மகாதேவ் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதே நேரம் மும்பை குர்லா எல்.பி.எஸ் மார்க்கில் வலுக்கட்டாயமாக போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்களில் “ஐ லவ் முஹம்மது” என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு மும்பை காவல்துறை ”சரியான சிகிச்சை” அளிக்கிறது,’’ என்று எழுதி ஒரு செய்தியையும் வீடியோவையும் காவி கும்பல் பரப்பியது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிந்தது.

மேற்கண்ட தகவல் உண்மையா என்று ஒரு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது  இந்த வீடியோவுக்கும், இவர்கள் கூறும் தகவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.

அதாவது மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவர்  ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவரது கூட்டாளிகள் சாலையில் ஊர்வலமாக சென்று இவர் விடுதலையானதை கொண்டாடியுள்ளனர். அப்போது, கையில் ஆயுதங்களுடன் சென்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். 

மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்கள் மூலமாக reels செய்தும் உள்ளனர். 

இதன்பேரில், Nashik City Police குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடைய 21 பேரை கைது செய்து, அவர்களை பொது மக்கள் பார்க்கும் வகையில் ஊர்வலமாக, அடித்து இழுத்துச் சென்றனர். இதைத்தான் சங்கீகள் வேறு வகையில் பரப்பினார்கள்.

மேலும் விவரமாக அறிய 

இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் 'நான் முகமதுவை நேசிக்கிறேன்' என்ற சர்ச்சை என்ன? - உலகம் - DAWN.COM https://share.google/uAu1PGXgFMOkC5om8

'ஐ லவ் முஹம்மது' என்ற எழுத்து.. உ.பி.யில் பெரும் போராட்டங்கள்.. போலீஸ் தடியடி | Communal Tensions Escalate in Uttar Pradesh: 'I Love Muhammad' Row Sparks Clashes, Police Lathicharge in Bareilly - Tamil Oneindia https://share.google/OgLgSBJme74D6R0JV

ஸஈத் பின் அல் முஸையப் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;  ஸுஹைப் அர்ரூமி (ரலி) அவர்கள் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து சென்ற போது சில குறைஷிகள் அவரை கொலை செய்யும் நோக்கில் பின் தொடர்ந்தார்கள். 

இதனைத் தெரிந்து கொண்ட ஸுஹைப் அர்ரூமி (ரலி) அவர்கள் தன் வாகனத்திலிருந்து இறங்கி அருகில் இருந்த மலை உச்சிக்கு ஏறி சென்றார்கள்.

"குரேஷிகளே! நான் மிகவும் திறமையாக வில் எரியும் வீரன் என்பதை நீங்கள் அறிவீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் அன்பு கூட்டில் கடைசி அம்பு வரை உங்கள் மீது எறிவேன்; பிறகு என் வாளால் உங்களோடு சண்டையிடுவேன்; இதற்கிடையில் உங்களில் எத்தனை பேருடைய தலை உருளும் என எனக்குத் தெரியாது பிறகு நீங்கள் செய்வதை செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்; நீங்கள் விரும்பினால் மக்காவில் எனது செல்வத்தையும், ஆடைகளையும் எங்கு வைத்திருக்கிறேன் என உங்களுக்கு அறிவித்துத் தருகிறேன்; நீங்கள் அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; அதே நேரம் என்னை என் வழியில் செல்ல அனுமதியுங்கள்" என்று சொன்னதும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 

பின்னர் அவர்களுக்கு தமது செல்வம் இருக்கும் இடத்தை காட்டி கொடுத்ததும் சந்தோசமாக திரும்பிச் சென்று விட்டார்கள். இதனை நபி (ஸல்) அவர்களிடம் நான் சொன்ன போது அதற்கு நபியவர்கள், "அபூ யஹ்யா! இது ஒரு லாபகரமான வியாபாரம் தான்! அபூ யஹ்யா!  இது ஒரு லாபகரமான வியாபாரம் தான்" என கூறினார்கள். 

அப்பொழுதுதான், "அல்லாஹ்வின் திருப்தியை நாடி தன்னையே அர்ப்பணிப்பவர்களும் மக்களில் இருக்கிறார்கள்" எனும் 2 : 207 வது வசனம் அருளப்பட்டது.

நூல்: முஸ்னது அஹ்மத் 

يروي سعيد بن المسيب رضي الله عنه قصة هجرته فيقول: لما أقبل صهيب مهاجرًا نحو النبي ﷺ، تبعه نفر من قريش، فنزل عن راحلته وانتثل ما في كنانته، ثم قال: “يا معشر قريش، لقد علمتم أني من أرماكم رجلًا، وأيم الله لا تصلون إليّ حتى أرمي بكل سهم معي في كنانتي، ثم أضرب بسيفي ما بقي في يدي منه شيء، افعلوا ما شئتم، وإن شئتم دللتكم على مالي وثيابي بمكة وخليتم سبيلي”. قالوا: نعم. فلما قدم على رسول الله ﷺ المدينة، قال: “ربح البيع أبا يحيى، ربح البيع أبا يحيى”. ونزلت الآية: {ومن الناس من يشري نفسه ابتغاء مرضاة الله} (البقرة : 207).

اقرأ المزيد في: 
صهيب الرومي .. صهيب الرومي ترك ماله حتى يهاجر في سبيل الله
https://islamonline.net/138897

அல்லாஹுவின் மீதும், ரசூலின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டதால் இந்த நபித்தோழர் தன் செல்வங்கள் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு நபிகளாரிடம் வந்து சேர்ந்தார். 

அதுமட்டுமின்றி குரைஷிகள் தம்மை தம் மார்க்கத்தின் மீது மிகவும் பற்றுள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் பணமும் ஆடைகளும் தருகிறேன் என்று சொன்னதும் அவர்கள் உடனே இந்த டீலுக்கு ஒப்புக்கொண்டு திரும்பி சென்று விட்டார்கள்; இவர்களின் மார்க்கப்பற்றை பார்த்தீர்களா என்பது போன்று ஸுஹைப் ரலி அவர்கள் சொல்லிக் காட்டியதாக இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்