சமய நல்லிணக்கம் என்றால் என்ன?

சமய நல்லிணக்கம் என்றால் என்ன? 
==================================

பல்வேறு மதங்கள், இனங்கள், சமய குழுக்கள் ஆகியன ஒன்றோடு ஒன்று இணைந்து தமக்குள் அன்போடும், மரியாதையோடும் இணக்கமாக இணைந்து வாழ்வது,

ஒருவரின் மத நம்பிக்கைகளை மற்றவர்கள் அவமதிக்காமல் மனிதநேய குணங்களை வெளிப்படுத்தி வாழ்வது, 

ஒரு மதத்தின் மீது பகை, வெறுப்பு, பாகுபாடு காட்டாமல் பிறர் வாழ்வதுதான் சமய நல்லிணக்கம்.

நபிகள் நாயகம் அவர்கள் இப்படித்தான் வாழச் சொல்லி இருக்கிறார்கள்; அவர்களின் ஒரு அமுதமொழியை பாருங்கள்.

•°•°•°•°•°•°

أبو صخر المديين، أنَّ صَفْوَانَ بْن سُلَيْمٍ، أَخْبَرَهُ عَنْ عِدَّةٍ، مِنْ أَبْنَاءِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ آبَائِهِمْ دِنْيَةٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا مَنْ ظَلَمَ مُعَاهِدًا ، أَوِ انْتَقَصَهُ، أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ، أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ، فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ، رواه أبو داود ٣٠٥٢

நபி (ஸல்) அவர்கள்,
"அறிந்து கொள்ளுங்கள்!  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் யார் சிறுபான்மையினராக வாழும் பிற மதத்தினரை கொலை செய்வாரோ, அல்லது அவருடைய உரிமையை பறிப்பாரோ, அல்லது சிறுபான்மையினரின் சக்திக்கு மீறிய  கடினமான சட்டத்தை இயற்றுவாரோ, அல்லது அவரின் விருப்பமின்றி அவருக்குரிய பொருளை எடுத்துக் கொள்வாரோ, அத்தகைய பாதிக்கப்பட்டவருக்காக மறுமை நாளில் நான்  அல்லாஹ்விடம் வாதாடுவேன்" என்று  கூறினார்கள். 

நூல் : அபூதாவூத் 3052

ஒரு முஸ்லிம் மூலமாக முஸ்லிம் அல்லாத ஒருவர் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவருக்காக தான், மறுமை நாளில் அல்லாஹ்விடம் வாதாடுவேன் என நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் மனிதத்தை எந்த அளவு மதித்திருக்கிறார்கள்?  என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மனிதம் மலர மதமாசாரியங்களை வீட்டு விலகுவோம்!

இது போன்ற கூட்டங்களில் பங்கு பெறுவோம்.

அழைப்பின் மகிழ்வில்:
••••••••••••••••••••••••••••••••••

பெரிய வடகரை ஜமாஅத்தார்கள் & 
நாஸிருல் மில்லத் நற்பணி மன்ற இளைஞர்கள்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்