விமோச்சனம் கிடைக்காத சாபம்....

விமோச்சனம் கிடைக்காத சாபம்....
==================================

நேற்றைய தொடர்ச்சி.....32

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
=================================

இப்னு ஸக்கா அவர்கள் கல்வியில் மிகப்பெரும் தேர்ச்சியைப் பெற்றார்; அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மிஞ்சிய அறிவாளிகள், கல்வியாளர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு சிறப்பைப் பெற்றார். 

அவர் நாவன்மை உடையவராகவும் விவாத அரங்கில் இவரை மிஞ்சிய அறிஞர் யாரும் இல்லை என்று சொல்லப்படுகிற அளவிற்கு புகழ் பெற்றவராகவும் விளங்கினார்.

பக்தாத் நகரத்தின் கலீஃபா அவர்கள் தமது தூதுவராக ரோம சக்கரவர்த்தியிடம் அனுப்பி வைத்தார். 

ரோம சக்கரவர்த்தி அவர்கள் இவருடைய கூர்மையான அறிவைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்; இஸ்லாம் மார்க்கம் சிறந்ததா? கிறிஸ்துவ மதம் சிறந்ததா? என்கிற விவாதத்தை ரோம சக்கரவர்த்தி  தோற்றுவித்தார். 

விவாதத்தில் பங்கு கொண்ட பாதிரியார்கள் அனைவரும் தினரினார்கள்; பதில் தெரியாமல் தெறித்து ஓடினார்கள். இதனாலும் ரோம சக்கரவர்த்திக்கு இவர் மீது அதிகம் மரியாதை உண்டானது. 

இப்னு ஸக்காவை சோதிக்கும் நோக்கத்தோடும் அவரை தம்மோடு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிலும் தன் அழகான மகளோடு அவரை நெருங்கிப் பழக இடம் கொடுத்தார்.

இருவரிடையே காதல் மலர்ந்தது; இப்னு ஸக்கா அவளை மணம் முடிக்க விரும்பினார் ; அப்பொழுது அரசர், "என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும்" என்று ஒரு நிபந்தனையை முன் வைத்தார். அவர் கிறிஸ்துவத்திற்கு மாறி திருமணமும் செய்து கொண்டார். 

சில காலங்களுக்குப் பிறகு அவருக்கு வெண்குஷ்டம் போன்ற தீராத நோய் ஏற்பட்டது; அதனால் அவருடைய மனைவியும், மற்றவர்களும் வீட்டை விட்டு துரத்தினர். 

ஆதரிப்பதற்கு ஆள் இல்லாமல் அவர் கடை தெருக்களில் சுற்றித்திரிந்தார்; யாசகம் கேட்டு சாப்பிட்டார். 

இந்நிலையில் இப்னு ஸக்காவை அறிந்திருந்த ஒருவர் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு, "ஏன் இந்த நிலை உமக்கு ஏற்பட்டது?" என்று விசாரித்தார். 

அதற்கு அவர், "என் போதாத காலம் நான் இந்த கதிக்கு ஆளாகி விட்டேன்; பக்தாத் நகரத்தில் வாழ்ந்த கௌஸ் அவர்களின் சாபம் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது" என்று கூறினார். 

"உமக்கு திருக்குர்ஆனில் இருந்து ஏதேனும் வசனங்கள் மனனமாக இருக்கின்றதா நீங்கள் ஹாஃபிலாக இருந்தீர்களே?" என்று அவர் கேட்டார். 

அதற்கு அவர், "ஒரே ஒரு வசனத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் இல்லை" என்று கூறினார்.

கடை தெருவின்  ஒரு ஓரத்தில் மரணப்படுக்கையில் கிடந்தவரின் முகத்தை கிப்லா பக்கம் முன்னோக்கி வைத்தார்; உடனே அவர் முகம் கிப்லாவை விட்டும் திரும்பிக் கொண்டது.; இதே நிலையில் அவர் காலமானார்.

தொடரும்........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்