கழுத்து வரை பணம்

கழுத்து வரை பணம் 
====================

நேற்றைய தொடர்ச்சி.... 33

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
==================================

அபூ ஸய்யித் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பக்தாதில் தேவையான அளவிற்கு கல்வி கற்ற பிறகு நடந்த நிகழ்வை அவர்கள் கூறுகிறார்கள்; 

டமாஸ்கஸ் நகரத்தின் அரசர் நூருத்தீன் ஷஹீது அவர்கள் என்னை வரவழைத்து வக்ஃபு சொத்துகளை நிர்வகிக்கும் உயர்ந்த பதவியை வற்புறுத்தி வழங்கி விட்டார்கள்! வேறு வழி இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டேன். 

அதேநேரம் தனிப்பட்ட முறையில் நான் செய்து வந்த தொழில் மிகப் பெரிய அளவில் லாபத்தை ஈட்டி கொடுத்துக் கொண்டே இருந்தது. 

அந்த வகையில் என்னிடம் செல்வம் கொட்டி கிடந்தது; கௌஸ் அவர்கள் சொன்னது போலவே நான் செல்வத்தால் சூழப்பட்டவனாக இருந்தேன். 

வக்ஃபு நிறுவனத்தில் அரசின் உயர்ந்த பதவியில் நான் இருந்தேன்; இந்தப் பணியில் நான் ஏதேனும் தவறு செய்து விட்டாலோ, அஜாக்கிரதையாக இருந்து குற்றம் சுமத்தப்பட்டாலோ நான் சிறை தண்டனையை அணுபவிப்பதோடு நான் சம்பாதித்த சொத்துகள் யாவும் பறிமுதல் செய்யப்படும் நிலையில் இருந்தேன். 

என் தன்மானத்தையும் சுயமரியாதையையும் தக்க வைத்துக் கொள்வதில் மிகப்பெரும் கவனம் செலுத்தினேன்.

எனவே எப்பொழுதும் எனக்கு நிம்மதி இல்லாத நிலை இருந்து வந்தது.

தொடரும்.......

https://youtu.be/ioWReF8Wc8M?si=S8-xpAWRnd3pHEAg

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்