அனைவராலும் மதிக்கப்படுகிறவரை கேவலப்படுத்தாதீர்

அனைவராலும் 
மதிக்கப்படுகிறவரை கேவலப்படுத்தாதீர் 
=====================================

நேற்றைய தொடர்ச்சி....34

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
===============================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு அல்லாஹ்விடம் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதின் அடையாளங்களை இறைநேசர்கள் மற்றும் அறிஞர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர் பொதுமக்களும் அறிந்து கொண்டார்கள். 

ஜின்களில் உள்ள இறைநேசர்கள் கூட அறிந்தனர்; அதனால் அறிஞர்களும் பொதுமக்களும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு பெரும் மதிப்பையும் மரியாதையையும் வழங்கினார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இளமையிலிருந்தே பெரியவர்களை கண்ணியப்படுத்தும் பண்பு உடையவராக இருந்ததால், அல்லாஹ் மற்றும் ரஸூலின் அன்புக்கு ஆளாகி உலக மக்களால் இறுதி நாள் வரை போற்றப்படும் கண்ணியத்தைப் பெற்றார்கள்.

மார்க்க அறிவு இல்லாத சிலர் சில இஸ்லாமிய அறிஞர்களை இறைநேசர்கள் என்று எண்ணி அளவுக்கு அதிகமான மரியாதையை வழங்குகிறார்கள்; பின்னர் அந்த அறிஞரின் ஏமாற்று வேலைகளை அறிந்து வருத்தப்படுகிறார்கள். 

மற்றொரு பக்கம் வாழ்ந்து மறைந்த இறைநேசர்களையும், வாழ்ந்து கொண்டிருக்கும் இறைநேசர்களையும் தவறாக பேசியும் எழுதியும் வருகின்றனர்; இதுவும் ஒரு ஆபத்தான போக்காகும். 

இந்த இரு சாராருமே இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

எனவே பொதுமக்கள் இந்த இரண்டு நிலைகளிலும் நடுநிலையான வழியை பின்பற்றுவதே சிறந்தது.

உண்மையான இறை நேசர்கள் யார்? என நம்மால் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், எவரையும் அவமதிக்காமல் அவர்களோடு மரியாதையுடன் பேசவும் எழுதவும் வேண்டும். 

ஒருவரை இறைநேசர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை; ஆனால் பலரால் மதிக்கப்படுகிற ஒரு இறைநேசரை இறைநேசர் என்று  நம்புவதற்கு மனம் இல்லை என்றால் அவரை நம்பாமல் இருந்து விடலாம்; அதே நேரம் அவரை குறித்து தவறாக பேசி விடக்கூடாது, எழுதிவிடக் கூடாதுங்க.

எனவே நாவையும் பேனாவையும் பேணிக்கொள்ளுங்கள்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்