குகை இருளில் நம்பிக்கை ஒளி

குகை இருளில் நம்பிக்கை ஒளி 
==============================

நேற்றைய தொடர்ச்சி....38

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; 

ஒருவர் சதா அல்லாஹ்வின் நினைவோடு அவனை வணங்கி வந்தால் மற்ற படைப்புகள் மீது வெறுப்பு உண்டாகி விலகி இறை நினைவோடு மட்டும் வாழ்வார். 

அல்லாஹ்வை அடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போது ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு பகரமாக பிற்காலத்தில் மிகப்பெரும் லாபத்தை அல்லாஹ் வழங்குவான் என்ற நம்பிக்கை தானாகவே உண்டாகும்.

குகைவாசிகளை பின் தொடர்ந்து சென்ற நாய்க்கு அவர்கள் ஆகாரம் கொடுக்கவில்லை என்றாலும் அவர்களை பின்தொடர்ந்தே சென்றது. 

அவர்களுக்காக குகை வாசலில் காத்திருந்தது போல நீங்கள் இறைவனை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தும், அவன் எதையும் உங்களுக்கு வழங்காவிட்டாலும் அதை பொறுமையாக சகித்துக் கொண்டால்  குகை வாசிகளையும் நாயையும் அல்லாஹ்வே பேசும் அளவிற்கு ஆனது போல் நீங்களும் இறைவனால் பேசப்படுவீர்கள்; அல்லது இறைவனால் பேச வைக்கப்படுவீர்.

309 வருடங்கள் உறங்க வைத்து உணர்வின்றி இருந்து அவர்களுக்கு உணவு வழங்கியது போன்று உங்களுக்கு தேவையான அனைத்தையும் அவன் வழங்குவான்.

தொடர்ந்து சிரமங்களை சகித்துக் கொண்டு வாழும் பொழுதுதான் அல்லாஹ்வின் நெருக்கம் நமக்கு கிடைக்கும். 

அல்லாஹ்வின் சன்னிதானத்தை அடைய முடியும்; அப்பொழுது அல்லாஹ், "அடியானே! நான் உனக்காக இருக்கின்றேன்; நீ எனக்காக இருக்கின்றாய்" என்று கூறுவான். 

இந்த நிலையை அடைந்த ஒருவர் அதே நிலையில் தொடர்ந்து நீடித்தால் அல்லாஹ்வின் நெருங்கிய அடியாராகவும், இந்த உலகில் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் ஆகிவிடுவார். 

இப்படிப்பட்டவர்தான் உண்மையான இறைநேசர்; இவரை கொண்டு அல்லாஹ் மக்களை நேர்வழிப் பெறச் செய்வான். இறைவா! இப்படிப்பட்டவர்களில் எங்களையும் நீ ஆக்குவாயாக! ஆமீன்!!

அல்லாஹ் ஒருவனை மனதில் வைத்து, மற்ற அனைத்தையும் மனதை விட்டும் அகற்றிவிடுவதே உண்மையான பக்தி!

அல்லாஹ்வின் நாட்டமும் விருப்பமுமே தன்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று நம்ப வேண்டும். 

நாம் செய்கிற அனைத்து செயலையும் அல்லாஹ்வே செய்ய வைக்கிறான் என்று உறுதி கொள்ள வேண்டும்! அப்பொழுதுதான் நமது உள்ளங்களில் ஞானம் ஊற்றெடுக்கும்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்