இது மொழிபெயர்ப்பு நூல்
இது மொழிபெயர்ப்பு நூல் :
நேற்றைய தொடர்ச்சி....57
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
இப்பொழுது எழுதப்பட்டு வரும் மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் சம்பந்தமான இந்த நூல் ஒரு அரபு நூலின் மொழி பெயர்ப்பாகும்.
அது, "ஷைகு அப்துல் காதிர் ஜீலானி {ரஹ்} ஹயாதுஹு வ ஆசாருஹு" எனும் நூலாகும். இந்த நூலை டாக்டர் ஷவ்கீ பஷீர் அப்துல் மஜீத் எகிப்து அவர்கள் 2005 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள்.
சூடான் நாட்டின் கர்தூம் தலை நகரத்தில் உம்தர்மான் Omdurman எனும் பகுதியில் உள்ள ஜாமிஆ உம்தர்மான் அல் இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய இவர் எழுதிய நூல்தான் மேற்கண்டது.
இவர் தனது முன்னுரையில் கூறுகிறார்;
மூல நூலாசிரியரின் முன்னுரை
==============================
الحمد لله، نستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله صلى الله عليه وسلم ، وبعد :
இந்த நூல் ஷைகு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பற்றியது. இவர்களைப் பற்றி தெளிவான ஆதாரப்பூர்வமான வரலாற்றினை எழுத வேண்டும் என ஆசைப்பட்டதின் விளைவே உங்கள் கைகளில் இந்த நூல் தவழ்கிறது.
சமீப காலமாக தஸவ்வுஃப், சூஃபித்துவம் குறித்த தவறான கருத்துக்கள் பரவுவதாலும், சூஃபித்துவத்தை மறுப்பதாலும் அதைப்பற்றி இந்த தலைமுறை மனிதர்கள் தெரிந்து கொள்வதற்காகவே எழுதத் தொடங்கினேன்.
தரீக்கா போன்ற ஞான மரபுகளை பின்பற்றி வரும் சிலர் அகீதா - கொள்கை சம்பந்தமான விஷயங்களிலும், தவ்ஹீத் ஓர் இறை கோட்பாடு சம்பந்தமான சில விஷயங்களிலும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் அதை சரி செய்யவும் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சொல்லாத செய்யாத சில பழக்க வழக்கங்களை இன்றுள்ள சிலர் செய்து வருகிறார்கள்! அவற்றை அவர்களிடம் இருந்து களை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
தொடரும்......
Comments
Post a Comment