மூல ஆசிரியரின் முன்னுரை
மூல ஆசிரியரின் முன்னுரை
நேற்றைய தொடர்ச்சி...58
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
எதையெல்லாம் செய்ய வேண்டும் என அல்லாஹ் உத்தரவிட்டு இருக்கிறானோ அதை அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ செய்தே ஆக வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் ருபூபியத் - அல்லாஹ்வை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்; இஸ்லாம் மார்க்கத்தின் பிற கடமைகளில் அலட்சியமாக இருக்கிறார்கள்; இது தவறான போக்காகும்.
அந்த வகையில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ருபூபியத் இறைவனை அடையும் வழியில் மட்டும் மக்களை வழிநடத்தாமல் இஸ்லாம் மார்க்கத்தின் அனைத்து கடமைகளையும் பின்பற்ற வழிகாட்டுகிறார்கள். அது இவர்களின் சிறப்பு தன்மைகளில் ஒன்று.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி சுருக்கமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இப்படி ஒரு நூலை எழுத வேண்டும் என முயற்சித்து எழுதி முடித்து இருக்கிறேன்; இதில் தவறுகள் இருக்கலாம் அதை அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டு பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்.
மனிதனின் முயற்சிகள் அனைத்திலும் தவறுகள் ஏற்படுவது இயற்கைதான்!
அதே நேரம் இந்த நூல் மிகச் சரியாக எழுதப்பட்டிருப்பதாக தாங்கள் கருதினால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள்.
இறைவன் விரும்புகின்றவற்றை மட்டுமே நான் செய்வதற்கு வழி காட்டும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.
த. ஷவ்கீ பஷீர் அப்துல் மஜீத்
1 / ஆகஸ்ட் / 2000
Comments
Post a Comment