இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் எழுதிய நூல்கள்

இமாம் ஜீலானி ரஹ் 
அவர்கள் எழுதிய நூல்கள் 
===========================

நேற்றைய தொடர்ச்சி....63

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரே ஒரு நூலைத்தான் எழுதி இருக்கிறார்கள்; அது அல் குன்யது லி தாலிபீ தரீகில் ஹக்
الغنية لطالبي طريق الحق 
என்பதாகும். 

இந்த நூலில் இஸ்லாம் மார்க்கச் சட்டங்கள், இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகள், சூஃபித்துவ நடைமுறை, சூஃபியாக்களின் ஒழுக்கங்கள் போன்ற பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இந்த ஒரு நூலை மட்டும் தான் எழுதி இருக்கிறார்கள் என்று வரலாறு தெளிவுபடுத்துகிறது. அநேக அறிஞர் பெருமக்களும் கூறுகிறார்கள்.

இவர்களின் பேச்சுகள், இவர்களின்  வரலாற்று நிகழ்வுகள் ஆகியன  அதிகம் பேசப்பட்டுள்ள பல நூல்கள் இருக்கின்றன; அவை அனைத்தும் அவர்களுடைய முரீதீன்கள், கலீஃபாக்கள், ஆலிம் மாணவர்கள் ஆகியோர்  எழுதியவைகள் ஆகும்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது ஐம்பதாவது வயதிலிருந்து 55 வது வயதிற்குள் இந்த நூலை எழுதி முடித்திருக்க வேண்டும் என நான் கணிக்கிறேன். 

ஏனென்றால் அவர்களின் ஐம்பதாவது வயதில் இருந்தே மிக அதிகமான நேரங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதிலும், பொதுமக்களுக்கு பயான் செய்வதிலுமே பெரும் பகுதி நேரத்தை செலவழித்து இருக்கிறார்கள். 

எனவே மேலே குறிப்பிட்டு அந்த காலத்திற்குள்ளாகத்தான் இந்த நூலை அவர்கள் எழுதியிருக்க வேண்டும்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்