காயிதே மில்லத்திற்கு காயிதே மில்லத் என பெயர் வைத்தது யார்?
💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 1 | தொடர் பரப்புரை 🔹
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
காயிதே மில்லத்திற்கு பெயர்
சூட்டியது யார்? அமானி ஹள்ரத்தா?
==================================
23/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதரஸாவில் மன்பயீ ஆலிம்கள் சங்கமிக்கும் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது.
படித்து முடித்து விட்டு சென்ற ஆலிம்களை அவ்வப்பொழுது அழைத்து தஸ்கியா ஆன்மஞான போதனைகளை செய்து மீண்டும் உற்சாகமாக சமூகத்திற்கு பணியாற்ற அனுப்பி வைப்பது வழமை.
அவ்வாறான ஒரு கூட்டம் தான் நடைபெற இருக்கின்றது; அதில் அனைத்து ஆலிம்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பும், பரப்புரையும் செய்யும் விதமாக இந்த தொடர்......
•°•°•°•°•°•°•
முஸ்லிம் லீக் கட்சியில் ஹரியானாவைச் சேர்ந்த நவாப்சா லியாகத் அலி கான் என்பவர் இருந்தார். இவர் 1936 களிலிருந்து முஹம்மது அலி ஜின்னா அவர்களின் வலது கரம் போல் செயல்பட்டார்.
1946 - 1947 களில் ஆங்கிலேய அரசு இந்தியாவில் இடைக்கால அரசை நியமித்த போது finance minister நிதி அமைச்சராக ஆங்கிலேய அரசாங்கத்தினரால் நியமிக்கப்பட்டார்.
பிற்காலத்தில் இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது இவர் பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கு இவரே முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இவரைத்தான் இந்தியாவில் 'காயிதே மில்லத்' என அழைத்து வந்தனர்.
1947 சுதந்திரத்திற்குப் பிறகு இவர் பாகிஸ்தான் சென்று விடுவார் என்ற நிலையில் இருந்தபோது 9/07/1947 ( 1366 ஷஃபான் மாதம் பிறை 19) அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் தலைவராக ஆலீ ஜனாப், எம். முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் ( மாகாண முஸ்லிம் லீக் தலைவர் சென்னை) அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்தப் பட்டமளிப்பு விழா நோட்டீஸில் மேற்கண்டவாறு தமிழ் மொழியிலும்
عالیجناب یم ۔ محمد اسماعیل، صدر مسلم لیک، صوبہ مدراس
என்று உருது மொழியிலும் நோட்டீஸ் அடிக்கப்பட்டு இருந்தது.
இதில் நீங்கள் கவனிக்க வேண்டும் 'காயிதே மில்லத்' என்று குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் தான் அன்று நடந்த பட்டமளிப்பு விழா மேடையில் அல்லாமா ஜியாவுதீன் அஹமது அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தலைவர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களைப் பார்த்து "இனி நீங்கள் தான் எங்கள் காயிதே மில்லத் (சமுதாயத் தலைவர், ) இன்று இந்தப் பட்டத்தை உங்களுக்கு சூட்டுகிறேன்" எனக் கூறினார்கள்; அதுவே இன்று நீடித்து நிலைத்திருக்கிறது.
சென்னை தலைமை காஜியாக இருந்த மர்ஹும் ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபி (ரஹ்) அவர்களின் மனைவியும், தாவூது மியாகான் அவர்களின் தாயாரும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவர்.
இந்தக் கருத்தை அவர்களின் பேரரர் தாவூத் மியாகான் அவர்களிடம் விசாரித்த போது கூறினார்கள்.
Comments
Post a Comment