ஆசிரியர்கள் தான் என் அடையாளம்
ஆசிரியர்கள் தான்
என் அடையாளம்
💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 7 | தொடர் பரப்புரை 🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
லால்பேட்டை மதரஸாவில் நான் ஓதும் போது ஐந்து ஆசிரியர்கள் எனக்கு அழகிய உபதேசங்களை வழங்கினார்கள்.
அவர்களை தெரிந்து கொள்வதற்கு முன் எனது இளம் பருவத்தில் இருந்து இன்று வரை 33 ஆசிரியர்களிடம் நான் பயின்று இருக்கிறேன் ; அந்தப் பட்டியலை நீங்கள் பாருங்கள்.
அதில் ரஹ்மானி பட்டம் பெற்ற ஆலிம், மன்பயீ , பாகவி, நூரி, ஜமாலி, ரியாஜி, தேவ்பந்தி, அன்வாரி, மிஸ்பாஹி, பண்டாரவடை காஸிமி, அரபு மொழியில் டாக்டர் பட்டம் பெற்ற PhD கள் என பல வகையான பட்டம் பெற்ற பலரிடம் அரபு மொழி கல்விப் பயிலும் பாக்கியம் பெற்றிருந்தேன்.
இது போன்று பல மதரஸாக்களில் ஓதிய பேராசிரியர்களிடம் பயிலும் பாக்கியம் இன்றுள்ள மதரஸாக்களில் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு மதரஸாவிலும், வெவ்வேறு மதரஸாக்களில் ஓதி பட்டம் பெற்ற திறமையான ஆலிம்களை பேராசிரியர்களாக சேர்த்து பேராசிரியர் பணியை செய்ய வைக்க வேண்டும்; அதில் பல நன்மைகள் இருக்கின்றது.
யூசுப் (அலை) அவர்கள் சொன்னது போல் நானும் கூட 11 நட்சத்திரங்களான அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற பேராசிரியர்களிடம் பயின்று இருக்கின்றேன்.
எனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பெரிய வடகரையில் மக்தப் ஆசிரியர்கள் :
=====================================
1. மர்ஹூம் அப்துல் ஸமது ஆலிம் பெரிய வடகரை (இவர் எங்கள் ஊரின் அப்துல்லாஹ் பாகவி ஹள்ரத் ரஹ் அவர்களிடம் பயின்றவர்.)
2. மர்ஹூம், மவ்லவி, B. முஹம்மது சுல்தான் ரஹ்மானி ஃபாஸில் மன்பயீ ஃபாஸில் தேவ் பந்தி (ரஹ்) இவர் எனது சிறிய தந்தையும் ஆவார்.
பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரியில் எனது ஆசிரியர்கள்.
====================================
3. மவ்லவி, ஹாஃபிழ், காரி, A. முஹம்மது முஸ்தபா பாகவி ஹள்ரத் அவர்கள்
3. - 1. மீண்டும் இரண்டாம் நம்பரில் உள்ள ஹள்ரத் அவர்கள்.
4. மர்ஹூம், மவ்லவி, அப்துல் வஹ்ஹாப் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் புது ஆத்தூர்
5. மர்ஹூம், மவ்லவி, காதர் முஹ்யித்தீன் காஸிமி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் முஹம்மது பட்டினம்
கூத்தாநல்லூர் ஃபைஜுல் பாகியாத் அரபுக் கல்லூரியில் எனது ஆசிரியர்கள்.
====================================
6. மர்ஹூம், மவ்லவி, முஹம்மது இப்றாகீம் அன்வாரி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் வடகரை தென்காசி.
7. மவ்லவி, ஹாஃபிழ், முஹம்மது மீரான் பாகவி ஹள்ரத் அவர்கள் வடகரை தென்காசி
8. மவ்லவி, ஹுஸைன் முஹம்மது ஹள்ரத் அவர்கள் வடகரை தென்காசி.
9. மவ்லவி, முஹம்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் பட்டு மாங்காடு பூந்தமல்லி, சென்னை.
பாண்டிச்சேரி கோட்டகுப்பம் ஜாமிஅதுர் ரப்பானியா அரபுக் கல்லூரியில் எனது பேராசிரியர்கள்.
====================================
10. இரண்டாம் நம்பரில் உள்ள ஹள்ரத் அவர்கள்.
11. மவ்லவி, ஹாஃபிழ், முஹம்மது ஜஹீருத்தீன் அன்வாரி, ஃபாஸில் தேவ் பந்தி கோட்டைக்குப்பம்.
12. மவ்லவி, சைய்யது முஹம்மது ரியாஜி ஹள்ரத் அவர்கள் மேலப்பாளையம்.
13. மவ்லவி, ஸர்தார் முஹம்மது நூரி ஹள்ரத் அவர்கள் தென்காசி .
நீடூர் மிஸ்பாஹுல்ஹுதா அரபுக் கல்லூரியில் எனது பேராசிரியர்கள்.
====================================
14. மவ்லவி O.M. அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்கள் வடகரை தென்காசி.
15. மவ்லவி, ஹாஃபிழ், முஹம்மது இஸ்மாயில் பாகவி ஹள்ரத் அவர்கள் (தற்போதைய முதல்வர்)
16. P.M. ஜியாவுதீன் பாகவி ஹள்ரத் அவர்கள் அய்யம்பேட்டை.
17. மர்ஹூம் , மவ்லவி, ஹாஃபிழ், முஹம்மது சதக்கத்துல்லாஹ் பாகவி மேலப்பாளையம் (சிதம்பரத்தில் வசிப்பிடம்)
18. மவ்லவி, ஹாஃபிழ், முஹம்மது ரஃபீக் பாகவி ஹள்ரத் அவர்கள் அய்யம்பேட்டை.
19. மவ்லவி, ஹாஃபிழ், அப்துஸ் ஸலாம் பாகவி ஹள்ரத் அவர்கள் மேலப்பாளையம்.
20. மவ்லவி, ஹாஃபிழ், காஜா முஹ்யித்தீன் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் கடையநல்லூர் (தற்போது இருப்பது பெரிய குளம்)
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் எனது பேராசிரியர்கள்.
====================================
21. மர்ஹூம், மவ்லவி, முஹம்மது ஜக்கரியா மன்பயீ, ஃபாஸில் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் லால்பேட்டை.
22. மர்ஹூம், மவ்லவி, அப்துர் ரப் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் லால்பேட்டை.
23. மவ்லவி , AEM. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் பேட்டை திருநெல்வேலி லால்பேட்டை.
24. மவ்லவி, அப்துல் அலி மன்பயீ ஹள்ரத் ரஹ் அவர்கள் லால்பேட்டை.
25. மவ்லவி, ஹாஃபிழ், A. நூருல் அமீன் மன்பயீ ஃபாஸில் மன்பயீ ஹள்ரத் அவர்கள் லால்பேட்டை.
சென்னை புதுக் கல்லூரியில் எனது பேராசிரியர்கள்.
====================================
26. அல்ஹாஜ், பேராசிரியர், அப்துல் மாலிக் Phd அவர்கள்.
27. மர்ஹூம் அல்ஹாஜ், பேராசிரியர், அப்துல் லத்தீஃப் Phd அவர்கள்.
28. பேராசிரியர், மவ்லவி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஜமாலி Phd ஹள்ரத் அவர்கள்.
29. அல்ஹாஜ், பேராசிரியர், கராமத்துல்லாஹ் பஹ்மனீ Phd அவர்கள்.
30. அல்ஹாஜ், பேராசிரியர், அஹமது இப்ராஹீம் Phd அவர்கள்.
31. அல்ஹாஜ், பேராசிரியர், ஸைய்யத் இம்தியாஸ் Phd அவர்கள்.
32. அல்ஹாஜ், பேராசிரியர், KMA. அஹமது ஜுபைர் Phd அவர்கள்.
33. அல்ஹாஜ், பேராசிரியர், ஸைய்யத் ஸஜ்ஜாத் ஹுஸைன் Phd அவர்கள்.
34. அல்ஹாஜ், பேராசிரியர், இம்தியாஸ் பீரான் Phd அவர்கள்.
24 வதாக உள்ள எனது உஸ்தாத், ஷைகு தஸவ்வுஃப்
அப்துல் அலி ஹள்ரத் (ரஹ்) அவர்களிடம் இரண்டு நூல்கள் ஓதி இருக்கின்றேன்.
இவர்கள் மிகவும் பேணுதலானவர்கள்; வாழ்க்கை பாடங்களை அதிகமாக சொல்லுவார்கள்; மிகவும் வெகுளித்தனமானவர்கள்; ஜக்கரியா ஹள்ரத் அவர்களைப் போன்று உலகம் தெரியாதவர்கள். மதரஸாவில் கல்வி போதித்து வந்த அதே வேளையில் விவசாய வேலைகளையும் கவனித்து வந்தார்கள்.
இவர்கள் பாடத்தில் கூறிய சுவாரசியமான பல தகவல்கள் நினைவில் இருந்தாலும் அது இந்த பதிவு நீண்டு செல்வதை எண்ணி முடித்துக் கொள்கிறேன்.
இறந்த என் ஆசிரியர்களுக்கு உயர்தரமான சொர்க்கத்தையும், வாழுகின்ற என் ஆசிரியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் அவர்கள் விரும்பும் உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் அல்லாஹ் முழுமையாக அருள்வானாக!
Comments
Post a Comment