பெரிய வடகரையில் விருது வழங்கும் விழா எப்போது?

21/12/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பலூர் ஸிராத்துல் முஸ்தகீம் எத்தீம்கானா மதரஸா பள்ளிவாசலில் பெரம்பலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் எனக்கும் வழங்கப்பட்டது.

எனது ஆசிரியர்களில் ஒருவரான மௌலானா ஹாஃபிழ், காரி, முஹம்மது முஸ்தபா ஹள்ரத் அவர்களுக்கு "பெரிய வடகரை மர்ஹூம் முஹம்மது காசிம் பாகவி ரஹ் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எனக்கும் எனது ஆசிரியருக்கும் எனது நண்பர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ஹள்ரத் அவர்கள் விருதினை வழங்கினார்கள்.

நமது பெரிய வடகரையில் நிரந்தரமாக ஒரு விருந்தினை உருவாக்க வேண்டும்; 

அதனை நமது சுற்றுவட்டார பகுதிகளில் சமூகத்திற்கு பயன்மிக்க வழிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வரும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், மக்களுக்கு பொது சேவைகள் செய்வோருக்கும் நமது அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்களின் பெயரால் வழங்க வேண்டும் என சில வருடங்களாகவே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது. 

அதனை 2025 ஆம் ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் செய்து விட வேண்டும் என முயற்சித்தோம்; அது இயலாமல் ஆகிவிட்டது. 

இன்ஷா அல்லாஹ்! எதிர்காலத்தில் அதை நனவாக்க வேண்டும். இதன் மூலமாகவும் நமது ஊரை உயிர்ப்போடும் உயர்வோடும் வைத்திருக்கலாம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அதற்காக நாங்கள் செய்த விருதின் வாசக அமைப்பு

பெரிய வடகரை மௌலானா முஹம்மது அப்துல்லாஹ் பாகவி (ரஹ்) விருதுகள் வழங்கும் விழா


நாள் : 
இடம் : 

"கற்றுக் கொடுப்பவனாகவோ, கற்பவனாகவோ,  கல்விக்கு உதவுவனாகவோ இரு; நான்காம் நபராக இருக்காதே!" என்ற நபிமொழிக்கினங்க  பந்நெடுங்காலம் கல்விக்கும்  ஆலிம்களுக்கும் உதவுவதில் தன்னை அற்பணித்துக் கொண்டு,  நிஸ்வான்  மதரஸாவின்‌ ஆரம்ப காலம் முதல்  சமூகத்திற்கு சேவையாற்றி வரும்  அன்பு சகோதரர்,  ஹாஜி, A. லியாகத் அலி அவர்களின் நற்ச்செயல்களை பாராட்டி  இவ்விருதினை வழங்குவதில் மகிழ்கின்றோம்.

அன்புடன் 

பெரிய வடகரை  ஜமாஅத்தார்கள்


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த வாசக அமைப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 

இவ்வாறு செய்யலாம் என ஆலோசித்து இருந்தோம்.

எதிர்வரும் வருடம் மேற்கொண்டு தொடர்ந்து செய்ய வேண்டும்.

சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குங்கள்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்