ஹஜ்ஜுக்குப் போன அரபு தமிழ் - அர்வி மொழி

ஹஜ்ஜுக்குப் போன 
அரபு தமிழ் - அர்வி மொழி 
===========================

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 14 | தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் இரண்டாவது முதல்வர் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்கு போகும் பொழுது என்னை அழைத்து, "பஷீர்! நாங்கள் ஹஜ்ஜுக்கு எடுத்துச் செல்லக்கூடிய மசாலா சாமான்கள் அடங்கிய டப்பாக்களுக்கு மேலாக அதனதன் பெயர்களில் அரபுத் தமிழில் எழுதி ஒட்டு; என் மனைவிக்கு அரபுத் தமிழ் தான் தெரியும்" என்று கூறினார்கள். 

நானும் அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார் போல் பேப்பர்களை வெட்டி வைத்துக் கொண்டு ملح மிளகு, கடுகு كدح, உப்பு ابو, புளிفلى, மஞ்சள் منجل என ஒவ்வொன்றுக்கும் அரபுத் தமிழில் எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்.

அச்சமயம் அந்தப் பக்கமாக வந்து காணலில்லாஹ் ஹள்ரத் அவர்கள் மஞ்சள்  منجل என்று எழுதியிருந்ததை பார்த்துவிட்டு, "இதை இப்படி எழுதக்கூடாது என சொல்லி منجض என இப்படி எழுத வேண்டும் ل லாம் எழுதக்கூடாது ض தான் எழுத வேண்டும்" என்று சொன்னார்கள். 

மஞ்சள் என்று எழுதப்பட்டுள்ள அரபு வார்த்தையான منجض என்பதில் உள்ளض  ழாதுக்கு கீழாகவும் ஒரு புள்ளி வைக்க வேண்டும் என்றும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

அரபு தமிழ் எப்படி எழுத வேண்டும் என்பதிலும் ஹள்ரத் அவர்கள் புலமைப் பெற்றிருந்தார்கள்;

அரபு தமிழ் - அர்வி மொழி வழியாகவும் மக்களுக்கு அறிவை புகட்டிய சமுதாயம் இந்த இஸ்லாமியர்கள் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தகவல்:
மவ்லவி, முஹம்மது பஷீர் சேட் மன்பயீ ஹள்ரத் அவர்கள் 
நினைவேந்தல் உரை

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்