லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையினருக்கு நன்றி !

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் 
உலமா சபையினருக்கு நன்றி !
=================================

அல்ஹம்துலில்லாஹ்! 
நேற்றைய தினம் லால்பேட்டை மாநகரத்தில் இரு பெரும் விழா நடைபெற்றது. 

மன்பயீ ஆலிம்கள் சங்கமிப்பு விழாவில் 700க்கும் மேற்பட்ட மன்பயீ ஆலிம்களும் 150 க்கும் மேற்பட்ட மற்ற உலமாக்களும் பெரும் திரளாக  கலந்து கொண்டார்கள். 

புகாரி ஷரீஃப்  ஐம்பதாம் பொன் விழா ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாருத் தஃப்ஸீர் மிகப்பெரியது என்றே நினைத்திருந்தவர்களுக்கு நேற்றுதான் "தாருத் தஃப்ஸீர் சிறிய கூடம்"  என்ற எண்ணத்தை உருவாக்கியது. 

அந்த அளவிற்கு அரங்கு நிறைந்தது மட்டுமின்றி இரண்டு புறங்களிலும் இருக்கைகள் போடப்பட்டும் இட பற்றாக்குறை நிலவியது. 

புகாரி ஷரீஃப் - நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளை கேட்பதற்கும், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை பாதுகாப்பதற்கும், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளின் மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்துவதற்கும் கூடிய கூட்டமாக இது அமைந்திருந்தது.

"உயர்ந்த சிந்தனைகளோடும், எண்ணங்களோடும், லட்சியங்களோடும் வாழப் பழகிக் கொள்ளுங்கள்" என்கிற கருத்தை எங்களின் ஆசிரியர் ஷைகுல் ஜாமிஆ அவர்கள் வலியுறுத்தி கூறினார்கள்; அந்தக் கருத்தை உள்வாங்கியவர்களாகவே அனைத்து மன்பயீ ஆலிம்களும் திரும்பி இருக்கிறார்கள்.

லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா சபையும் மதரஸா மாணவர்களும் மிக மிக மிக மிக மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். 

உணவு, உறைவிடம், தண்ணீர் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.

பெரும் கூட்டத்தில் யாருக்கும் எந்த சிரமங்களும்  இல்லாத அளவிற்கு சிறப்பாக செய்திருந்த பாங்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

எங்களின் ஷைகுல் ஜாமிஆ அவர்களுக்கும், லால்பேட்டை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையினருக்கும், மதரஸா மாணவர்களுக்கும் இதற்காக உழைத்த உதவிகள் செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்