லால்பேட்டை அமானி ஹள்ரத் ரஹ் அவர்கள் கூறினார்கள்; திமுக வெற்றி பெறும்

லால்பேட்டை அமானி ஹள்ரத் ரஹ் அவர்கள் கூறினார்கள்; திமுக வெற்றி பெறும் 
=====================================

1962 ஆம் ஆண்டு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரியில் மதரஸாவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 

அதில் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு அறிவிப்பு செய்தார்கள். 

இன்று நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தேவ்பந்தில் இருந்து இன்ன ஹள்ரத் அவர்களை அழைத்து இருந்தோம்; கடிதத்தில் அவர்கள் வருவதாக சொல்லி இருந்தார்கள்; 

அதனால் அவர்கள் வந்து செல்வதற்குத் தேவையான பணத்தை மணியாடர் மூலம் சில மாதங்களுக்கு முன்பே அனுப்பி வைத்து விட்டோம்.

ஆனால் அந்தப் பணம் சென்ற வாரம்தான் அவர்களுடைய கைகளுக்கு சென்றடைந்து இருக்கிறது ;

அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் ஹள்ரத் அவர்கள், "நான் வந்து செல்வதற்கான  அவகாசம் இல்லாததால்; இனி புறப்பட்டால் வந்து சேர முடியாது என்பதால் என்னால் வர இயலாது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்; அந்த பணத்தையும் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன்" என்று தந்தி அனுப்பி இருக்கிறார்கள். 

நாமெல்லாம் இங்கே ஒன்று கூடுவது இங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், மத்தியில் ஆளும் அரசாங்கத்திற்கும் பிடிக்கவில்லை போல் தெரிகிறது; அதனால் தான் அரசு ஊழியர்கள் இவ்வளவு காலதாமதமாக மணியார்டரை வழங்கி இருக்கிறார்கள்;

பல மாநில முஸ்லிம்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்வது அரசாங்கத்திற்கு எரிச்சலை ஊட்டி இருக்கிறது" என்று கூறினார்கள்.

மேற்கண்ட கருத்தை கூறிய ஹள்ரத் அவர்கள் தொடர்ந்து கூறினார்கள். 

அன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது; முஸ்லிம்கள் திமுகவின் பக்கம் அணி சேர்ந்து அந்த கட்சியை வலுப்படுத்தினார்கள். 

தமிழ்நாட்டில் திமுக  வலுபெற்று வருவது காங்கிரஸ் கட்சியினருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கி வந்தது. 

மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் திமுக வெற்றி பெற வேண்டும் என எங்களால் இயன்ற பணிகளை முஸ்லிம் லீக்கிற்கு துணையாக இருந்து செய்து வந்தோம். 

இந்நிலையில் காட்டுமன்னார்குடி தொகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பிரமுகர் தோற்கடிக்கப்பட்டு திமுக வெற்றி பெற்றிருந்தது.

அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் "பல மாநில முஸ்லிம்கள் ஒர் இடத்தில் ஒன்று சேர்வது தமிழகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பிடிக்கவில்லை என்பதை தான் 'காங்கிரஸ்' என்ற வார்த்தையை பயன்படுத்தாமல்  கூறினார்கள் என்று ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.

மவ்லவி, அமானுல்லாஹ் மன்பயீ , சோழபுரம் கும்பகோணம் 

1962 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. 

இதில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திமுக சார்பாக போட்டியிட்டு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஜி. வகீசம் பிள்ளை அவர்களை விட 107 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதரஸா மாணவர்களும் வாக்களித்ததாலும் முஸ்லிம் லீக் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் பக்கபலமாக இருந்து பல உதவிகள் செய்ததாலும் சிறிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது என்பதே உண்மை.

இதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜி. வகீசம் பிள்ளை அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, "எனது தோல்விக்குக் காரணம் லால்பேட்டையில் வாக்குரிமை இல்லாத சிலர் வாக்களித்தது தான்" என வழக்கு நடத்தினார் என்றெல்லாம் ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.

அன்று காங்கிரசுக்கு எதிராக முஸ்லிம்கள் அணி திரண்டு திமுகவின் பக்கம் நின்றார்கள். 

இன்று பிஜேபிக்கு எதிராக அணி திரண்டு முஸ்லிம்கள் திமுகவின் பக்கம் நிற்கிறார்கள். 

மத்தியில் யார் ஆள வேண்டும் என முஸ்லிம்கள் முடிவு செய்கிறார்களோ அந்த முடிவின் பக்கம் நின்றால் முஸ்லிம்களின் ஆதரவும், தமிழகத்தில் ஆட்சி செய்யும் பொறுப்பும் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு திமுக செயல்படுகிறது என்பதே உண்மை.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்