மன்பவுல் அன்வார் ஆலிம்களின் அடிச்சுவடுகள்

 

மன்பவுல் அன்வார் 
ஆலிம்களின் அடிச்சுவடுகள் 
اثار علماء منبع الانوار
=====================================

23/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று மன்பயீ ஆலிம்கள் சங்கமித்த விழாவில் ஒரு நூல் வெளியிடப்பட்டது அதன் பெயர் தான் இன்றைய தலைப்பு.

176 பக்கங்களை கொண்ட இந்த நூல் 12 தலைப்புகளில் காலம் சென்ற பேராசிரியப் பெருந்தகைகள் வரலாறு, மதரஸாவின் வரலாறு, லால்பேட்டை மக்கள் மதரஸாவின் மீதும் மாணவர்கள் மீதும் வைத்திருக்கும் பாசம் குறித்தெல்லாம் இந்த நூலில் விரிவாகப் பேசுகிறது. 

இது ஒருவர் எழுதிய புத்தகம் அல்ல! மன்பயீ ஆலிம்களில் பலர் தம் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள்; அவை தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது;  வாங்கி வாசியுங்கள்.

அட்டை படத்தில் உள்ள செய்தி :
==============================

இஸ்லாமிய வரலாற்றில் அரசர்களின் பெயர்களை விட ஆலிம்களின் பெயர்கள்தான் அதிகமாக பதிவாகி இருக்கிறது.

ஆலிம்கள் எந்த அரியணையிலும் அமரவில்லை; ஆனால் அனைவருடைய இதயங்களையும் ஆட்சி செய்கிறார்கள்!

தலைமுறை தலைமுறையாக குர்ஆனையும், ஹதீஸையும் காக்கிறவர்களும், உயிர்ப்போடு வைத்திருப்பவர்களும் ஆலிம்கள்தாம்!

வாளால் நாடுகளின் எல்லைகள் காக்கப்படலாம்: ஆனால் ஆலிம்களின் இல்மால்தான் ஈமான் காக்கப்படுகிறது!

ஆலிம்களின் புரட்சி - இரத்தம் சிந்துவதல்ல! பலகையில் எழுத்தாக, மிம்பரில் உரையாக, மிஹ்ராபில் தொழுகையாக உம்மத்தை கட்டி எழுப்பும் புரட்சியாளர்களாக இருக்கிறார்கள்.

உலக மக்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ஆலிம்கள் விழித்திருந்து உம்மத்திற்காக கண்ணீர் சிந்துகிறார்கள்.

ஆலிம்களை ஒதுக்கும் சமூகம் அறிவீனர்களை தலைவராக்கி தறிக்கெட்டுத் திரியும்!

ஆலிம்கள் சமூகத்தின் அலங்காரங்களோ, அடையாளங்களோ அல்ல! அவர்கள் சமூகத்தின் அடித்தளம்!

ஆலிம்களின் உரைகள் மக்களை மகிழ்விப்பதற்கானது அல்ல! மறுமையை நினைவூட்டுவதற்கானது!

ஒரு ஆலிமின் கண்ணீர், ஒரு சமூகத்தாரின் தொடர்பை அல்லாஹ்வுடன் ஏற்படுத்துகிறது!

ஒரு ஆலிமின் ஸஜ்தா, நாம் அறியாத பல அழிவுகளை தடுத்து நிறுத்துகிறது! 

ஆலிம்களின் வாழ்க்கை புகழுக்காக எழுதப்பட்டதல்ல! புதிய பாதையை காட்டுவதற்காக எழுதப்பட்டது! 

ஆலிம்களின் வரலாறு சுய சரிதை அல்ல! உம்மத்திற்கான பாடநூல்!

•°•°•°•°•°•°•°

டிசம்பர் 11ஆம் தேதி முதல் நேற்று வரை 20 நாட்களாக எழுதப்பட்ட செய்திகள் யாவும் மேற்கண்ட நூலில் இடம்பெறாத தகவல்களாகும். 

இளம் முனைவர் - M. Phil படிப்பிற்காக 20 வருடங்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட செய்திகளில் சிறிதளவை எழுதினேன். 

இன்றுடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறேன். நாளை முதல் வேறு ஒரு தொடர் தொடரும்.

அன்புடன் 

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ 
31/12/2025

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்