ஃபுட்பால் கிரவுண்ட் போல நஞ்சை வயல் .......

ஃபுட்பால் கிரவுண்ட் போல 
நஞ்சை வயல் .......
=============================

கைருல் மில்லத் அப்துல்லாஹ் 
 ஹள்ரத் ரஹ் அவர்கள் 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷


கைருல் மில்லத் அப்துல்லாஹ் 
ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்துக் கொண்டு தமது விவசாய நிலத்திற்கு சென்றார்கள்.

அங்கே வயலின் வரப்புகளில் நடந்து சென்றோம்; நஞ்சை ஓட்டப்பட்டு, சேறு கலக்கப்பட்டு, இலை தலைகள் மிதிக்கப்பட்டு, ஃபுட்பால் கிரவுண்ட் போல் சமமாக பயிர் நடுவதற்கு ஏற்ற நிலையில் நஞ்சை வயல் இருந்தது. 

ஹள்ரத் அவர்கள் ஒரு குச்சியின் அடிபாகத்தில் ஒரு பேப்பரை சுருட்டி அதற்கு மேல் மற்றொரு பிளாஸ்டிக் கவரை சுருட்டி நஞ்சை நிலத்திற்கு அடியில் ஊன்றி வைத்தார்கள். 

உடன் சென்றிருந்த நான், "ஹள்ரத் என்ன செய்கிறீர்கள்? எதை  ஊண்டுகிறீர்கள்?" என்று கேட்டேன். 

அதற்கு ஹள்ரத் அவர்கள், "நமக்கு இருப்பது குறைந்த நிலம் தான்! நமக்கு அதிகமான தானியங்கள் தேவைப்படுகிறது; மகசூல் அதிகம் தேவை உடையவர்களாக இருக்கிறோம்; 

எனவே இறைவன் மீது நம்பிக்கை வைத்து 

أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ

“நீங்களா இதை வளர்க்கிறீர்கள்?
இல்லை நாம்தான் (அல்லாஹ்) இதை வளர்ப்பவர் ஆவோம்?”

என்ற வசனத்தை எழுதி ஊண்றி வைத்திருக்கிறேன்; இன்ஷா அல்லாஹ்! இறைவன் அதிகமான மகசூலை தருவான்" என்று கூறினார்கள். 

"ஹள்ரத் இந்த வசனங்களை நானும் ருகையாவாக பயன்படுத்த அனுமதிக்கிறீர்களா?" என்று கேட்டேன். "பயன்படுத்திக் கொள்!" என்று கூறினார்கள். 

நானும் என் தேவைகளுக்கும், என்னிடம் கேட்டு வருவோருக்கும் இந்த வசனங்களை பயன்படுத்தி வருகிறேன்.

தகவல் :

மவ்லவி S. அஹ்மது பஷீர் சேட் மன்பயீ ஹள்ரத் அவர்கள் முதுகுளத்தூர்

யார் எந்தத் துறையில் வேலை செய்தாலும் அந்தத் துறையில், தான் மேம்பட்டு செல்வதற்கு காரணம் இறைவன் தான் என நம்பினால், நம்பிக்கையோடு இருந்தால் இறைவன் மென்மேலும் அந்தத் துறையில் உயர்த்துவான் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு.

மதரஸா பள்ளிவாசல் லால்கான் மஸ்ஜித் மிகவும் பழமையானது; என்பதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்கள் இருக்கின்றது. 

ஃபஜ்ருடைய தொழுகையின் போது ஒவ்வொரு தூணிலும் ஒருவர் இருவர் என சாய்ந்து அமர்ந்து மாணவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். 

சிலர் ஓதி கொண்டிருப்பார்கள்; சிலர் ஹிஃப்ழு செய்வார்கள்; சிலர் திக்ரு செய்து கொண்டிருப்பார்கள்; சிலர் கிதாப்களை எடுத்து வந்து பாடம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

தூங்கிக் கொண்டிருப்பவர்களை கண்டறிந்து பஹ்ருல் உலூம் முஹம்மது இப்ராஹிம் ஹள்ரத் ரஹ் அவர்கள் அவரின் தோலை தொட்டு எழுப்பி விடுவார்கள். அவர் விழித்ததும் "தொப்பையை திருப்பி போடு" என்று சொல்லுவார்கள்; அவரும் திருப்பி போடுவார். 

அந்த மாணவரின் செயல்களாலும் தலை அசைவுகளாலும் அவரின் தூக்கம் கலைந்து கவனமாக தன் பணியை மேற்கொள்வார். 

உட்கார்ந்து கொண்டு தூங்குவோரை கண்டால் எங்களுக்கெல்லாம் பஹ்ருல் உலூம் ஹள்ரத் அவர்களுடைய நினைவு தான் வரும்.

மவ்லவி A. முஹம்மது ஹபீப் ஆலிம் ஃபாஸில் மன்பயீ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்