ஒளிரும் கோட்டையிலிருந்து லால்பேட்டைக்கு இருவர்

ஒளிரும் கோட்டையிலிருந்து லால்பேட்டைக்கு இருவர்
==================================

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠

🔹 DAY – 2 | தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

எனது தந்தை ஸனது பெறாத ஆலிம். கேரளா பொன்னானி சாலிம் எனும் ஊரிலுள்ள நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் வந்த ஷைஹுமார்களின் தொடர்பு எங்களின் குடும்பத்தினருக்கு உண்டு.

அந்த ஷைகுமார்கள் எங்கள் வீட்டுக்கும் ஊருக்கும் வந்துச் செல்வார்கள். அவர்களுக்கு நான் அதிகமாக கித்மத் - பணிவிடைகள் செய்திருக்கின்றேன்.

அதன் பாக்கியம்தானோ என்னவோ தெரியவில்லை; நான் ஓதிய மதரஸாக்களில் இருந்த அனைத்து உஸ்தாத்மார்களுக்கும் பணிவிடை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஷைகு அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்), ஷைகு இப்ராஹீம் ஹள்ரத் (ரஹ்), ஷைகு ஸக்கரிய்யா ஹள்ரத் (ரஹ்), ஷைகு அப்துல் ஜமீல் ஹள்ரத் (ரஹ்), ஷைகு இஸ்மாயில் ஹள்ரத் (ரஹ்), ஷைகு ஷைகு முஹம்மத் ஃபலகீ ஹள்ரத் (ரஹ்), ஷைகு அப்து ரப் ஹள்ரத் (ரஹ்) ஆகியோருக்கு நான் முழுமையாக பணிவிடைகள் பல செய்திருக்கின்றேன். அதனால் அவர்களின் அன்பையும் துஆவையும் பெற்றுள்ளேன்.

முதல்வர் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்களுடைய மனைவி முதுமையின் காரணமாக முதலில் இறந்து விட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு பிறகு ஹள்ரத் அவர்கள் சற்று தளர்ந்து போய் தான் இருந்தார்கள்.

அதனால் தனது வீட்டின் கடன்கள் சொத்து பத்துகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு வீராணம் ஏரிக்கரையில் தொழுது துஆ செய்து விட்டு அன்றே மதரஸா நிர்வாகிகளிடம் மதரஸா சம்பந்தமாக சில செய்திகளை பேசினார்கள்.

பின்னர் அப்துல் ஜமீல் ஹள்ரத் (ரஹ்) அவர்களிடம் வந்து தாம் கண்ட ஒரு கனவைச் சொல்லி விளக்கம் கேட்டார்கள்.

"ஒளிரும் ஒரு மாளிகையில் இருந்து பச்சை உடை அணிந்த இரண்டு பேர் வந்து என்னை அழைத்தார்கள்; நான் அவர்களுடன் சென்றுவிட்டேன் இதற்கு என்ன பொருள்" என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல் ஜமீல் ஹள்ரத் (ரஹ்) அவர்கள், நீண்ட மௌனத்திற்கு பிறகு "உங்களின் இவ்வுலகப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது" என்று சொன்னார்கள்.

உடனே இருவரும் இருகரம் பிடித்து கண்ணீர் விட்டு அழுதனர்; இருவரும் ஆறத் தழுவிக் கொண்டனர்; சில நாட்களுக்குப் பிறகு
ஹள்ரத் அவர்கள் இறந்து விட்டார்கள். இந்தக் கனவைக் குறித்து அப்துல் ஜமீல் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் என்னிடம் நேரடியாகச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : மவ்லவி, S.M. அக்பர் அலி ஃபாஜில் மன்பயீ கடையநல்லூர்

மேற்கண்ட நிகழ்வை மற்றொரு மாணவர் வேறொரு கோணத்தில் கூறுவதை பாருங்கள்.

அல்லாமா அப்துல்லாஹ் ஹள்ரத் ரஹ் அவர்கள் வஃபாத்திற்கு முன்பு ஒரு கனவுக் கண்டார்கள். அதைப் பற்றி தங்களுக்கு நெருக்கமான ஷம்சுல் வரா அல்லாமா அப்துல் ஜமீல் ஹள்ரத் (ரஹ்) அவர்களிடம் சொல்லி, கனவின் விளக்கத்தை அவர்களின் வாயிலாக அறிய விரும்பினார்கள்.

ஷம்சுல் வரா அவர்கள், 'தங்களுக்கு அல்லாஹ் சிறப்பானப் பதவியை வழங்குவான்" என்று சமாதானம் கூறினார்கள்.

அல்லாஹ் வெகு விரைவில் தன் பக்கம் அழைத்து கொள்ள இருக்கிறான் என்கிற ரகசியத்தை ஹள்ரத் அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.

பின்னர் லால்பேட்டையில் உள்ள ஒவ்வொருப் பள்ளிவாசல்களுக்கும் சென்று ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

மேலும் மதரஸாவின் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்துத் தனக்குப் பின்னால் எப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் மாணவர்களையும் அழைத்து கல்விக் கற்றல், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், பெரியவர்களுக்கும் செய்ய வேண்டிய மரியாதைகளை சொல்லிக் கொடுத்தார்கள்.

ஹள்ரத் அவர்கள் தினந்தோறும் தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள்.

வஃபாத் அன்று காலையில் தஹஜ்ஜத் தொழுவதற்கு எழுந்திரிக்காமல் இருக்கும் நிலையில் சுபுஹுடைய பாங்கு சொல்லப்பட்ட உடன் ஹள்ரத் அவர்களின் மகளார் எழுப்பச் சென்ற போது ஹள்ரத் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் சென்றுவிட்டார்கள் என அறிந்தார்கள்.

ஏராளமான உலமாப் பெருமக்களும். அரசியல் பெருமக்களும். இஸ்லாமியச் சகோதரர்களும் ஜனாஸாத் தொழுகையில் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்தை நஸீபாக்கித் தருவானாக! ஆமீன்!!

அறிவிப்பாளர்: மவ்லவி முஹம்மது சுல்தான் மாஜிதி மன்பயீ பேராசிரியர்: ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி, கிளியனூர்.

நல்லவர்களுக்கு மரணம் முன்னறிவிப்பு செய்துவிட்டு தான் வரும் போல் தெரிகிறது...

இதுபோன்ற ஒரு நிகழ்வை கீழே கமாண்ட் பாக்ஸில் பாருங்கள்....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்