உன் நூலில் முழுமையாக ஸலவாத் எழுத மாட்டாயா?!
உன் நூலில் முழுமையாக
ஸலவாத் எழுத மாட்டாயா?!
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 89
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
ஹதீஸ் துறை அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்;
“நான் ஹதீஸ்களை எழுதிக் கொண்டிருந்தேன்; (நபி ஸல் அவர்களின் பெயர் வரும் இடங்களில்) ‘ஸல்’ என்று மட்டும் எழுதுவேன்.
ஒருநாள் கனவில் நபி (ஸல்) அவர்களை கண்டேன்;
அவர்கள் என்னிடம்,
"உன் நூல்களில் என் மீது ஸலவாதை முழுமையாக எழுத மாட்டாயா?" என்று கேட்டார்கள்.
அதற்குப் பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயரை எழுதும்போதெல்லாம்,
‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்று முழுமையாகவே எழுதுவேன்.
நூல் : அஸ் ஸவாயிகுல் முஹர்ரிகா
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுவோம்; எழுதும்போது கவனமாக எழுதுவோம்.
Comments
Post a Comment