நபிகள் நாயகத்தை கனவில் காண என்ன செய்ய வேண்டும் ?
நபிகள் நாயகத்தை கனவில்
காண என்ன செய்ய வேண்டும் ?
குர்ஆன் மீது
பிற புத்தகங்களை வைக்கலாமா?
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 90
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
முற்காலத்தில் இரண்டு நல்ல மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அடிக்கடி கனவில் கண்டு வந்தார்கள்.
இவ்வாறு இருவரும் நீண்ட காலம் நபிகளாரை கனவில் கண்டு மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இருவரில் ஒருவர் மட்டுமே நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டு வந்தார்; மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தது.
அப்பொழுது நபிகளாரை கனவில் காணாதவர், "தோழரே! நீங்கள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டால் எனது ஸலாத்தினை சொல்லுங்கள்;
மேலும் அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கனவில் தாங்கள் ஏன் காட்சியளிக்கவில்லை என்றும் நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார்.
பிறகு அந்த நண்பர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்; அவரின் ஸலாமை எடுத்துச் சொன்னார்; நண்பரின் கனவில் தாங்கள் ஏன் காட்சியளிக்கவில்லை என்றும் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சில சமயம் குர்ஆன் ஷரீஃபிற்கு மேல் வேறு சில நூல்களை வைக்கும் பழக்கம் உடையவராக இருக்கிறார்" என்று கூறினார்கள்.
உடனே தூக்கத்திலிருந்து விழித்து தன் நண்பரை தேடிச் சென்று தான் கண்ட கனவை கூறினார்.
அந்த நண்பர் உடனே தன் நூலகத்திற்கு சென்று ஏதேனும் குர்ஆன் ஷரீஃபிற்கு மேல் வேறு நூல்கள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார்;
அவ்வாறே குர்ஆன் ஷரீஃபுக்கு மேலாக சில நூல்கள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது; அவற்றை எடுத்து தனியாக உயரமான இடத்தில் வைத்தார்.
குர்ஆன் ஷரீஃப் மிக உயர்ந்ததாகும் அதைவிட உயர்ந்தது வேறு எதுவும் இல்லை.
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவோருக்கு அவர்களை படைத்தாள்பவனிடம் சிறந்த நன்மை உண்டு! .22: 30
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
அல்லாஹ்வின் சின்னங்களை யார் கண்ணியப்படுத்துகிறாரோ, அதுவே உள்ளங்களில் உருவான தக்வா - இறையச்சமாகும்.
நூல்: அல் பிதாயா வந்நிஹாயா
Comments
Post a Comment