ரொம்பதான் சிரிக்காதீங்க

ரொம்பதான் சிரிக்காதீங்க 
<=><=><=><=><=><=><=><=><=><=><=>

அல்லாஹ் நாடிய அளவு ஓது 
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 91

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

அபூல் வஃபா அல் காரி அல்ஹரவீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
ஒரு நாள் நான் அரசரின் அரண்மனையில் திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். 

ஆனால் அங்கே இருந்தவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள்; என் ஓதுதலை அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. 

அதனால் நான் மிகுந்த மனவருத்தத்துடன் வீட்டிற்கு திரும்பினேன்; அந்த இரவு உறக்கத்தில் கனவில் நபி (ஸல்) அவர்களை கண்டேன். அவர்களின் முகத்தின் நிறம் சற்றே மாறியிருந்தது; (அதாவது அவர்கள் கோபமாக இருந்தார்கள்).

அவர்கள் என்னிடம்,
“அல்லாஹ்வின் வார்த்தையான திருக்குர்ஆனை காது கொடுத்து கேட்காமல் பேசிக்கொண்டிருக்கும் மக்கள் இடையேவா நீ ஓதுகிறாய்?
இதன் பிறகு அல்லாஹ் நாடிய காலம் வரை இனி நீ ஓதாதே" என்று கூறினார்கள்.

( நபி (ஸல்) அவர்கள், "நீ ஓதாதே!" என்று சொன்னதால் என்னால் வாய் பேச முடியாமல் ஆகிவிட்டது.)

பின்னர் நான் விழித்தேன்;
அதன் பின்பு நான்கு மாதங்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தேன்; பேச முயற்சிக்கவும் இல்லை.

ஏதேனும் தேவையிருந்தால், அதை ஒரு பேப்பரில் எழுதி கொடுத்து அனுப்புவேன்; எனக்கான பதில்கள் கிடைக்கும்.

இந்நிலையில் ஒரு நாள் ஹதீஸ் கலை அறிஞர்களும், மாபெரும் சிந்தனையாளர்களும் என்னைச் சந்தித்தனர்.

அவர்கள், 'அல்லாஹ் நாடிய அளவு தவிர’ என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியிருப்பதால்
நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் பேசுவீர்கள்" என்று அவர்கள் ஆறுதல் கூறினார்கள். 

நான்கு மாதங்கள் கழித்து, முன்பு கனவு கண்ட அதே இடத்தில் நான் மீண்டும் உறங்கினேன்;
அப்போது கனவில் நபி (ஸல்) அவர்களை மீண்டும் கண்டேன்;
இந்த முறை அவர்களின் முகம் மகிழ்ச்சியால் ஒளிர்ந்தது.

அவர்கள் என்னிடம் 
“நீ தவ்பா செய்தாயா?” என்று கேட்டார்கள்; நான் “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன்;

“தவ்பா செய்தவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்;
உன் நாவை வெளியே நீட்டு" என்று கூறினார்கள்.

நான் நாவை வெளியே நீட்டினேன்;
அவர்கள் தமது சுட்டுவிரலால் என் நாவைத் தொட்டு தடவினார்கள்;

“நீங்கள்  மக்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது,
அவர்கள் கேட்காமல் பேசினால்,
அவர்கள் செவிமடுக்கும் வரை உன் ஓதுதலை நிறுத்திவிடு” என்று கூறினார்கள்; அக்கணமே நான் விழித்தேன்.

அல்லாஹ்வின் அருளால் என் நாவு மீண்டும் திறந்து பேசத் தொடங்கியது.
அல்ஹம்துலில்லாஹ்.

நூல் : முன்தகபுல் கலாம் ஃபீ தஃப்ஸீரில் அஹ்லாம்

குர்ஆன் ஓதப்படும் பொழுது அதை காது கொடுத்து கேட்காமல் இருப்பதும், பேசிக் கொண்டிருப்பதும் குர்ஆனை அவமதிப்பது போன்று ஆகும். குர்ஆன் ஓதப்படும் சப்தம்,  ஓசை வெற்று ஓசை அல்ல! இறைவனின் வார்த்தைகளை தாங்கிய ஓசை. 

ஓதப்படும் குர்ஆனை காது கொடுத்து கேட்பது ஈமானின் அடையாளம்.

மிஷ்காதுல் மஸாபீஹ் எனும் ஹதீஸ் நூலுக்கு மிர்காதுல் மஃபாதீஹ் எனும் விரிவுரை நூலை எழுதியவர் இமாம் அலி பின் ஸுல்தான் முஹம்மத்
அபுல் ஹஸன் அபுல் வஃபா அல் காரி அல் ஹரவீ (ரஹ்) அவர்கள் தான் இந்த கனவை கண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1520 களில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹராவ் எனும் பகுதியில் பிறந்து கி.பி. 1606 களில் மக்காவில் காலமானார்கள். இவர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்