அவனை படுக்கவைத்து அறுத்து விடு.....
அவனை
படுக்கவைத்து அறுத்து விடு.....
மாதம்: 11
தொடர்: 92
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
முராதக் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
(ஈராக்கில் உள்ள பஸரா நகரத்திற்கும் ஈரான் பாரஸீக நகரத்திற்கும் இடையே உள்ள) அஹ்வாஸ் பகுதியின் ஆளுநர்களில் ஒருவரிடம் ஒரு பொருளை நான் விற்றிருந்தேன்.
அதற்கான விலையைப் பெறுவதற்காக அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன்.
ஒரு முறை அவர் அபூ பக்ர் (ரலி) அவர்களையும், உமர் (ரலி) அவர்களையும் இழிவாகப் பேசினார;
அவருடைய பதவி மற்றும் அதிகாரத்தின் மீதிருந்த பயத்தால், நான் எதிர்த்துப் பேசவில்லை.
(அவர் இப்படிப் பேசி விட்டாரே என்ற) மிகுந்த மனவேதனையுடன் நான் வீட்டிற்குத் திரும்பினேன்; அந்த இரவு கவலையுடன் உறங்கினேன்.
அப்போது கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்; நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே!
இன்னவர் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களை இழிவாகப் பேசுகிறார்" என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
“அவனை என்னிடம் கொண்டு வா ” என்று கூறினார்கள். நான் அவனை அழைத்து வந்தேன். நபி (ஸல்) அவர்கள் “அவனை படுக்கவை" என்று கூறினார்கள்.
நான் அவனை படுக்க வைத்தேன்.
பின்னர் அவர்கள், “அவனை அறுத்துவிடு” என்று சொன்னார்கள்;
அந்தச் சொல்லைக் கேட்டதும் என் கண்களில் மிரட்சி ஏற்பட்டது மட்டுமின்றி அதை செய்வது பாரதூரமான காரியமாக எனக்குத் தோன்றியது.
“அல்லாஹ்வின் தூதரே! நான் அவனை அறுக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்டேன்; அதற்கும் அவர்கள் “அறுத்து விடு” என்று மூன்று முறை கூறினார்கள்.
பின்னர் அவனது கழுத்தில் கத்தியை வைத்து நான் இழுத்தேன்; பின்னர்
அவனை அறுத்து விட்டேன்.
அடுத்த நாள் காலையில், “நான் அவனிடம் சென்று அறிவுரை கூற வேண்டும்; நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டதை அவனிடம் சொல்ல வேண்டும்” என நினைத்தேன். அதற்காக அவனுடைய வீட்டிற்குச் சென்றேன்.
அவனுடைய வீட்டை அடைந்தபோது, அங்கே அழுகுரல் கேட்டது; நான் விசாரித்தபோது, “அவன் சென்ற இரவு இறந்துவிட்டான்” என்று கூறப்பட்டது.
நூல் : முன்தகபுல் கலாம் ஃபீ தஃப்ஸீரில் அஹ்லாம்
முராதக் அல் பஸரி மூன்றாம் நூற்றாண்டில் ஈராக் பஸராவில் வாழ்ந்த ஃபிக்ஹு அறிஞர் ஆவார்.
நபிகளாரையும், நபிமார்களையும், ஸஹாபாக்களையும், திருக்குர்ஆன் கூறும் நல்ல மனிதர்களையும் அவமதிப்பது பெரும் பாவம்.
நமது நாவை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அழிவு நம்மைத் தேடி வரும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எச்சரிக்கிறது.
|
|
|
தொடரும்.....
Comments
Post a Comment