அமெரிக்கா 5 நாள் போர் நிறுத்தம் கேட்பது ஏன்?
அமெரிக்கா
5 நாள் போர் நிறுத்தம் கேட்பது ஏன்?
==================================
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று பழமொழி சொல்லுவார்கள்.
அது போலவே அமெரிக்காவின் பொருளாதார அழிவை தடுத்து நிறுத்தவே 5 நாள் அவகாசம் கேட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஹீலியம் கேஸ் என்று ஒன்று உள்ளது. இதைக் கொண்டு ஏ.ஐ. தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் போர்டுகள், செல்போன் போர்டுகள், சிப்புகள் , எலக்ட்ரானிக் போர்டுகள், மருத்துவ உபகரணங்கள் கருவிகள் போன்றவற்றுக்கு இந்த ஹீலியத்தை பயன்படுத்துவார்கள்.
அவ்வாறே கேன்சர் பேஷண்டுகளுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த ஹீலியம் கேஸ் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கேஸ் கத்தாரில் 200க்கும் மேற்பட்ட கண்டெய்னரில் கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் , சவுத் கொரியா, இந்தோனேசியா தைவான், ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு சென்றடைய வேண்டும்.
கத்தார் ரஸ்லபான் என்கிற இடத்திலிருந்து இந்த ஹீலியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலக ஹீலியம் உற்பத்தியில் சுமார் 40% கத்தாரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மைனஸ் 260 டிகிரியில் கூலிங் செய்து, இந்த ஹிலியத்தை பிரித்து எடுக்கப்படுகிறது.
இது லிக்வுடாக எடுத்து பூமிக்கு அடியில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது; கேஸாக எடுத்து சக்தி வாய்ந்த இரும்பு குடுவைகளுக்குள் சிலிண்டர்களுக்குள்) அடைக்கப்பட்டு உடனே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இரும்பு குடுவைகளுக்குள் இருப்பவைகள் 45 நாட்களில் வேறு இடங்களில் மாற்றி வைக்கப்பட வேண்டும்; இல்லை என்றால் அவை வெடித்து விடும்.
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளி வருகின்ற தி ஹில் the hill எனும் பத்திரிகை அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவு குறித்து மிகவும் மோசமாக எழுதி இருக்கிறது;
அதனால் அமெரிக்கா மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும், அமெரிக்கா மக்களால் வெறுக்கப்படுகிற நம்பர் ஒன் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்றும் சொல்லியிருக்கிறது.
மற்றொருபுறம் ஈரானில் இருந்து ரஷ்யா மற்றும் சைனாவிற்கு செல்ல வேண்டிய ஹீலியம் கேஸ் செல்வதை ஈரான் அரசு அனுமதித்து இருக்கிறது; அதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை; பாதிக்கப்படாது.
ஹீலியம் அமெரிக்கா தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லாததால் செல்போன் உற்பத்தி, கம்ப்யூட்டர் உற்பத்தி போன்ற அனைத்து துறைகளும் முடங்கிப் போய்விடும்; அதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.
இது பல லட்சம் கோடி வருவாயை தடுக்கும் மூல காரணி என்பதால் அமெரிக்கா அதிர்ந்து போய் ஐந்து நாட்கள் இடைவெளி விட்டிருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
செமி கண்டக்டர் உற்பத்தி அதாவது செல்போன் போர்டு போன்ற உற்பத்திகள் மூலம் வருடத்திற்கு 470 லட்சம் கோடி லாபம் கிடைக்கின்றது.
ஈரானுடைய ஹீலியம் உற்பத்தி செய்யும் கேஸ் கம்பெனிகளின் மீது இஸ்ரேல் தாக்கியதால் ஈரான் கத்தாருடைய ரஸ்லபான் ஹீலியம் உற்பத்தி கம்பெனியின் மீது குண்டுகளைப் போட்டு நாசப்படுத்தியது.
குண்டு போடப்பட்ட அந்த கம்பெனியில் இருந்து மட்டுமே 14 சதவீதம் ஹீலியம் கேஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ரஸ்லபான் ஹீலியம் கம்பெனியில் மிஷனரி பாதிக்கப்பட்டு இருப்பதால் இனி ஹீலியம் உற்பத்தியே இல்லை என கத்தார் அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த 26 நாட்களாக ஏற்றப்பட்டு கப்பலில் இருக்கும் ஹீலியம் உரிய இடங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா போரை நிறுத்த சொல்லி இருக்கிறது என்பதே உண்மை.
ஆனால் ஈரான் அரசின் உள்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராய்க்சி, "அமெரிக்கா ஐந்து நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்து விட்டு அந்த நாட்களில் தனது படைகளை எங்கள் நாட்டைச் சுற்றி நிறுத்தவும், ஆயுதங்களை வாங்கி இந்தப் பகுதிகளில் சேமிக்கவுமே ஐந்து நாட்களை கேட்கிறது அதனால் நாங்கள் போர் நிறுத்தம் செய்வதாக இல்லை" என கூறுகிறார்.
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் சொந்தமான டியகோ கார்சிய்யா தீவை ஈரான் தன் நாட்டில் இருந்து 4000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவை மிஷல்கள் மூலம் தாக்கியிருக்கிறது; அது அவர்களை கதிகலங்க செய்திருக்கிறது;
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஈரான் வைத்திருக்க கூடும் அதனால் அமெரிக்காவையும் நேரடியாக தாக்க வாய்ப்பு இருக்கிறது;
அப்படி மட்டும் அது செய்து விட்டால் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் என அஞ்சியே அமெரிக்க அரசாங்கம் பின்வாங்குகிறது என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment