கஷ்டங்கள் விலகும் :

நபி (ஸல்) அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் :
=========================

மாதம் : .......3

தொடர்......14

கஷ்டங்கள் விலகும் :
=====================

நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டவர், கஷ்டத்தில் இருந்தால் அல்லாஹ் அவருக்கு சந்தோஷ வாசல்களைத் திறந்து விடுவான். மீளமுடியாத துயரங்களில் சிக்கித் தவித்தால் அல்லாஹ் அவருக்கு சிறந்த விடியலை ஏற்படுத்துவான்.

மேலும் கனவு கண்டவர் கொத்தடிமையாகவோ அல்லது ஏதேனும் மனிதர்களால் ஏதேனும் ஒரு இடத்தில் நிர்ப்பந்தப்படுத்தி தங்க வைக்கப்பட்டு இருந்தாலோ, சிறைப்படுத்தப்பட்டு இருந்தாலோ அவருக்கு அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பும் விடுதலையும் கிடைக்கும்.

கனவு கண்டவர்கள் அநீதம் இழைக்கப்பட்டவர்களாக இருந்தால் உதவி செய்யப்படுவார்கள்; அச்சப்படுத்தப்பட்டவர்களாக இருந்தால் பாதுகாப்புப் பெறுவார்கள்.

ஒரு பெண் நபிகளாரை பார்த்தால்...:
==================================

நபி (ஸல்) அவர்களை ஒரு பெண் கனவில் கண்டால் அவள் உயர்ந்த பதவிகளைப் பெறுவாள்; வாழ்கிற இடத்தில் பிறர் புகழும்படி வாழ்வாள்; அவள் நல்ல குடும்பப் பெண்ணாகவும் பத்தினிப் பெண்ணாகவும் இருப்பாள்; நல்ல ஸாலிஹான சந்ததியை பெற்றெடுப்பாள்.

கடனாளி கண்டால்...:
======================

கடனாளியாக இருப்பவர் தன் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டால் அவர் தன் கடன்களை அடைக்க அல்லாஹ் வழிவகை செய்வான்; 

நோயாளியாக இருப்பவருக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தை வழங்குவான்; ஹஜ் செய்யாதவர் ஹஜ் செய்யும் பாக்கியத்தைப் பெறுவார்; சண்டை சச்சரவுகளில் கட்டுண்டவர் அவற்றிலிருந்து வெளிவரும் வழியை அல்லாஹ் திறந்து வைப்பான்; விளைச்சல் இல்லாத தரிசு நிலங்களில் விளைச்சல் பெருகும்.

.
.
.
.
.
தொடரும்........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்