3. உம்மை நரகத்தில் விழவிடாமல் தடுக்கும் :
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 4
தொடர் எண் :............. 26
3. உம்மை நரகத்தில்
விழவிடாமல் தடுக்கும் :
========================
காலித் பின் ஸஈத் பின் அல் ஆஸ் பின் உமையதுல்லாஹ் (ரலி) அவர்கள் தம் கனவில் நரகத்தின் விளிம்பில் நிற்பது போன்று கண்டார்கள்; அந்த நரகத்தின் விசாலத்தை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்; எனது தந்தையே அதற்குள் என்னை தள்ளி விடுவது போன்றும் கனவு கண்டேன்" என்று கூறினார்.
அந்த நரகத்தில் விழுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களால் பிடித்து நிறுத்துவது போன்றும் கனவு கண்டேன்.
இந்த கனவை அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது; அதற்கு அவர்கள், " உனக்கு நல்லதே நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; நீ இந்த நபியை பின்பற்று; நீ பயந்ததில் இருந்து உமக்கு பாதுகாப்பு கிடைக்கும்" என்று கூறினார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்; அவர்களிடம் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். இஸ்லாத்தில் இணைந்ததிலிருந்து இரவும் பகலுமாக நபி (ஸல்) அவர்களுடனே அவர் காலத்தை கழித்தார்;
அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் இஸ்லாத்தில் இணைந்தார்; உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அபி சீனியாவில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு இவர் தான் வக்கீலாக இருந்தார்கள்.
நூல்: பிதாயா வந் நிஹாயா
.
.
.
.
.
தொடரும்..............
Comments
Post a Comment