வக்ஃபு திருத்தச் சட்டம் பிஜேபியினருக்கு வெற்றியா?
வக்ஃபு திருத்தச் சட்டம்
பிஜேபியினருக்கு வெற்றியா?
கஅபாவை அழிக்க வந்த
ஆபிரஹா மன்னனுக்காக
மக்க மாநகர் திறந்தே கிடந்தது ;
எதிர்ப்பே இல்லாமல் மக்காவை அழிக்கப் போகிறோம் என்கிற ஆணவத்தோடு நுழைந்த ஆபிரகாம் அடிச்சுவடு இல்லாமல் அவனும்
அவன் பரிவாரங்களும்
அழிந்துப் போனார்கள்!
அதுபோல்
மூஸா நபியை துரத்தி வந்த ஃபிர்அவ்ன்
தனக்காக திறந்திருந்த
நைல் நதியில் மூஸா சென்று விட்டார்
அவரை நான் அளிப்பேன் என ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் எதிர்ப்பே இல்லாமல் உள்ளே நுழைந்தவன் அடிச்சுவடே இல்லாமல்
அவனும் அவன் பரிவாரங்களும் அழிந்து போனார்கள்.
அதுபோல் எதிர்ப்பே இல்லாமல் வக்ஃபு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற ஆணவத்தில் பிஜேபியினர் பெருமிதம் கொள்கிறார்கள்.
பிஜேபினரின் வெற்றி ஆபிரகாம் அழிந்ததை விடவும், ஃபிர்அவ்ன் அழிந்ததை விடவும் கொடூரமாகவும் வரலாறாகவும் மாறும்.
"சிவன் சொத்து குலநாசம்" என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அது அல்லாஹ்வுக்கும் பொருந்தும்.
Comments
Post a Comment