நாயகமே ! ஷிப்லியவா முத்தமிட்டீர் ?

நபி (ஸல்) அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
===========================
மாதம் : 6

தொடர் : 40

19. நாயகமே ! ஷிப்லியவா முத்தமிட்டீர் ?
=========================

அபூபக்கர் முஹமது பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் இருந்த போது சூஃபி அபூபக்கர் ஷிப்லீ (ரஹ்) அவர்கள் வந்தார்கள். 

அவரைக் கண்டதும் அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று, அவர்களை முஆனகா - கட்டியணைத்த  பிறகு அவர்களுடைய நெற்றியில் இரண்டு கண்களுக்கு இடையே முத்தமிட்டார்கள்.

அறிவிப்பாளர் அபூபக்கர் முஹமது பின் உமர் (ரஹ்) அவர்கள், "எனது தலைவரே! ஷிப்லியை போய் நீங்கள் இப்படி கண்ணியப்படுத்துவதா? பங்தாதில் இருக்கிற அனைவரும் இவரை பைத்தியம் என்றல்லவா சொல்கிறார்கள்?" என்று கேட்டார்கள். 

அதற்கு அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஷிப்லீ அவர்களிடம் எதைச் செய்வதை நான் கண்டேனோ அதையே நான் இப்பொழுது செய்து இருக்கிறேன்; 

ஒருமுறை நபி (ஸல்)  அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், ஷிப்லீ அவர்கள் நபிகள் நாயகம் அவர்களை முன்னோக்கி வந்து அவர்களுக்கு எதிரில் நின்றார்கள்;  அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அவருடைய இரண்டு கண்களுக்கு இடையே நெற்றியில் முத்தமிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! ஷிப்லீ அவர்களை இப்படியா நீங்கள் கண்ணியப்படுத்துவீர் ? என்று நான் கேட்டதற்கு அவர்கள், "இவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும்

 لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ 

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ [ التوبة:129 128]

சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை மூன்று முறை தவறாமல் ஓதி வருகிறார் ; மேலும் 

صلى الله عليك يا محمد 

-ஸல்லல்லாஹு அலைக்க யா முஹம்மத் என்றும் மூன்று முறை ஓதி வருகிறார்" என்று சொன்னார்கள்.

பின்னர் ஒரு முறை ஷிப்லீ (ரஹ்) அவர்கள் என்னிடம் வந்த போது, "தாங்கள் தொழுகைக்குப் பின்னால் என்ன  ஓதுகிறீர்கள்" என்று கேட்டேன். 

அப்பொழுது அவர், நபி (ஸல்) அவர்கள் கூறியதையே கூறினார்கள்.

நூல் : ஜலாவுல் அஃப்ஹாம், தாரீகுல் பங்தாத்

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷிப்லீ (ரஹ்) அவர்களை பங்தாது மக்கள் பைத்தியம் என்றே நினைத்தார்கள். 

ஆனால் அவர் துரவர வாழ்க்கையை மேற்கொண்டு இருந்ததால், பார்ப்பவர்கள் கண்களுக்கு அவர் பைத்தியமாகவே தெரிந்தார்; ஆனால் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தை பெற்று வாழ்ந்தார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்