மகாத்மா காந்தியின் 156 - வது பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்த நாள் நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை காந்தி அமைதி நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பத்து தலைப்புகளில் ஒரு பேச்சுப் போட்டியை அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தியது. 

அதில் முப்பது பள்ளி கல்லூரி மாணவர்கள் 136 பேர் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியருடன் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்குமே சமமாக சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வு சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள செயின்ட் ரஃபேல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 1 மணி வரை 
நடைபெற்றது.

சமுதாயத்தில் சமத்துவம் வர வேண்டுமானால் போட்டி, பொறாமை, ஒருவரை ஒருவர் விலக்குதல் இல்லாத ஒரு பண்பாட்டை நாம் இளைய தலைமுறையினரிடம் உண்டாக்க வேண்டும். 

அதற்கு ஏற்றவாறு இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டுச் சான்றிதழும்,
ரூபாய் 350 மதிப்புள்ள பரிசுப் புத்தகங்களும்  வழங்கப்பட்டது.  

முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் என்று மூன்று பேரை மட்டும் வெற்றியாளர்களாக அறிவிக்காமல் எல்லோரையும் வெற்றியாளர்களாக அறிவித்தது இந்தக் கூட்டத்தின் தனிச்சிறப்பு.

இதன் மூலம் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையின் திறமையை வியந்து பாராட்டி மகிழும் பண்பாடு உண்டாக்கப்பட்டது. 

தனது குழந்தைக்கு மட்டும் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற ஆவலை பெற்றோரிடம் தூண்டும் பொழுது மற்ற பெற்றோரும் குழந்தைகளும் அவர்களுக்கு எதிரியாகி விடுகிறார்கள் என்ற உண்மையை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் கலந்துகொண்ட 300 பேரும் உணர வாய்ப்பளித்தது. 

“நம்முடைய மென்மைத் தன்மையால் உலகையே அசைக்க முடியும்” என்ற மகாத்மா காந்தி உடைய நம்பிக்கை குழந்தைகளுடைய மனதில் ஆழமாக பதியும் வண்ணமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. 

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்