7/10/2025 நாகரீகத்தின் நிறுவனர் நபிகள் நாயகத்திற்கு மீலாது விழா
அறியாமையும்
அநீதியும்
அதிகரித்திருந்த காலத்தில்,
பணக்காரர்கள் ,
பதவி வகித்தவர்கள்
பலவீனர்களையும்
ஏழைகளையும்
ஆதிக்கம் செய்து வந்த நேரத்தில்,
தேசத்தின் பொருளாதாரம்
மனிதநேயம் ஆகியன
வீழ்ச்சி அடைந்த தருணத்தில்,
கோலோச்சிய கொடுங்கோல்களை
தூக்கி எறிந்து
மனித குலத்தை மீட்க
எவரும் வர மாட்டார்களா என
ஒரு பிறப்பை எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தில்,
அமைதியும், புனிதமும்
ஒருங்கே பெற்ற மக்கா நகரில்,
நாகரிகத்தின் நிறுவனர்
மனித குலத்தின் பேராசிரியர்
புதிய வடிவில் இறை நம்பிக்கையை முன்மொழிந்த தலைவர்
பிறந்த நாள் தான் மீலாது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிறப்பை போற்றும் விதமான மீலாது மாநாடு சென்னை எக்மோர் சிராஜ் ஹாலில் காலை 9 :00 மணியிலிருந்து இரவு 9: 00 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.
இதனை சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருக்கிறது. அனைவரும் திரளாக வாருங்கள்.
நபிகள் நாயகத்தின் போதனைகள் முஸ்லிம்களுக்கானது மட்டும் அல்ல! அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் பொதுவானது!
அனைத்து மதத்தினரும் வருக!
Comments
Post a Comment