மன்பவுல் அன்வாரில் வாரிசு ஆலிம்கள் .............

இமாம் ஷாஃபியீ ( ரஹ்)
அவர்கள் எந்த மத்ஹப் ?
==========================

மன்பயீ ஆலிம்களை சந்தித்து பேசும்பொழுது சில ஆலிம்கள் கூறிய கருத்துக்கள் என் நெஞ்சைத் தொட்டது; அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

மர்ஹூம் அப்துல் ரப் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் பாடத்தில், "இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் எந்த மத்ஹபை சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். 

நாங்கள் அனைவரும் திரு திரு என முழித்துக் கொண்டிருந்தோம்; எங்களில் ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. 

பேச்சுவாக்கில் அந்த பேச்சு மறந்து வேறு பேச்சுகளுக்கு சென்று விட்டோம்; அந்தக் கேள்வியை மறந்தே விட்டோம். 

அந்தப் பாடத்தின் முடிவில் பெல் அடித்த பிறகு நாங்கள் புறப்பட தயாராக இருந்த போது அப்துர் ரப் ஹள்ரத் ரஹ் அவர்கள், "அவர்களை 'முஜ்தஹித்' என்று சொல்ல வேண்டும்" என்று கூறினார்கள். இதனை என்னால் மறக்கவே இயலாது என எனது வகுப்புத் தோழர் ...... கூறினார்.

°•°•°•°•°•°•

மன்பவுல் அன்வாரில் 
வாரிசு ஆலிம்கள் .............
========================

சில வாரிசு உலமாக்களை மதரஸாவில் பார்க்கும் பொழுது மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. 

மர்ஹும் அப்துல் ஜமீல் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்களின் மகனார் நூருல் அமீன் ஹள்ரத் அவர்களை பார்க்கும் பொழுது எங்களுடைய உஸ்தாதை பார்ப்பது போன்று இருக்கின்றது. 

குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் காரி ஸாகிப் அவர்களை பார்க்கும் பொழுது அச்சு அசலாக அப்படியே எங்களது ஆசிரியத் தந்தை அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்களை பார்த்தது போன்ற மன நிறைவு ஏற்படுகிறது; 

அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் வழங்க நான் துஆ செய்து கொண்டே இருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே வந்து இவர்களைப் பார்த்தது, மனதுக்கு ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கின்றது. 

தகவல் : 
மவ்லவி அமானுல்லாஹ் மன்பயீ சோழபுரம் அவர்கள் கூறினார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்